தைபே: தைவான் நாட்டின் முதல் பெண் அதிபராக ஜனநாயக முன்னேற்றக்
கட்சியைச் சேர்ந்த சாய் இங் - வென் பதவியேற்க உள்ளார்.
சீனாவின் அண்டை நாடான தைவானில் தற்போது, தேசியக் கட்சி ஆட்சி செய்து
வருகிறது. அக்கட்சியின் ஆட்சிக்காலம் முடிவடைய உள்ளதையொட்டி, அங்கு புதிய
நாடாளுமன்றத்தையும், அதிபரையும் தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று
நடைபெற்றது.
Tsai Ing-wen is elected Taiwan's first female president
அதிபர் தேர்தலில் களத்தில் நிற்கும் தேசிய கட்சியின் எரிக் சூ-வின்
ஆதரவாளர்களும், ஜனநாயக முன்னேற்றக் கட்சி வேட்பாளர் சைங்-இன்(Tsai ing)
ஆதரவாளர்களும் தலைநகர் தைபே உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம்
தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, நேற்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணிக்கு
நிறைவு பெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள்
அறிவிக்கப்பட்டன. இதில் எதிர்க்கட்சியான ஜனநாயக முன்னேற்றக் கட்சியைச்
சேர்ந்த சாய் இங்-வென் அதிக வாக்குகளைப் பெற்று தேர்தலில் வெற்றி
பெற்றுள்ளார். ஆளுங்கட்சியின் வேட்பாளராக போட்டியிட்ட எரிக் சு
தோல்வியடைந்தார்.
மேலும், தோல்வியை ஒப்புக்கொண்டு தனது கட்சி தலைமை பொறுப்பிலிருந்து
விலகுவதாக எரிக் சு தெரிவித்துள்ளார். இதையடுத்து, தைவான் நாட்டின் முதல்
பெண் அதிபராக சாய் இங்-வென் பதிவியேற்க உள்ளார்.
சீனாவுடனான உறவு குறித்த விவாதம் நடைபெற்று வந்த வேளையில் தைவானில்
நடைபெற்ற தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. இதனால் தைவான்
தேர்தலையும், வாக்குப்பதிவுக்குப் பிறகு நடைபெறப்போகும் நிகழ்வுகளையும்
அண்டை நாடான சீனா உன்னிப்பாக கவனித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
://tamil.oneindia.com
://tamil.oneindia.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக