சனி, 2 ஜனவரி, 2016

ஷகீலாவை மோகன்லாலும் மம்முட்டியும் சதிசெய்து விரட்டினார்கள்

வயதாகி, கவர்ச்சி நடிகை என்ற இமேஜிலிருந்து தமாஷ் நடிகை என்றான பிறகு ஷகிலா இன்னும் பரபரப்புச் செய்திகளின் நாயகியாகத்தான் இருக்கிறார்.
மலையாள பட உலகில் 1990 மற்றும் 2000-ம் ஆண்டுகளில் ஷகிலாவின் ஏகபோக கவர்ச்சி ராஜ்ஜியம்தான். கேரளத்து முதல் நிலை நாயகர்களான மம்முட்டியும் மோகன்லாலுமே போட்டி போட அஞ்சிய நடிகை இந்த ஷகிலா. இது மிகையல்ல.. நாற்பது வயதுக்காரர்கள் பலரும் கடந்து வந்த உண்மை.
குறிப்பாக தமிழகத்தின் ஒற்றைத் திரை அரங்குகள் பலவற்றைக் காப்பாற்றியது ஷகிலா படங்கள்தான். இப்போது புத்தம் புது படங்களை வெளியிடும் பரங்கிமலை ஜோதி உள்பட!
 ஆனால் ஒரு கட்டத்தில் தணிக்கை குழுவினர் திடீரென ஷகிலா படங்கள் ஆபாசமாக இருப்பதாக கெடுபிடி செய்தனர். சான்று அளிக்கவும் மறுத்தனர்.  இந்த மோகன்லால்  மம்முட்டி எல்லாம் மிக மோசமான மனிதர்கள் , சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் தமிழர்களை பாண்டி என்று கொச்சைபடுத்துவார்கள் ...பொறாமையால்  நடிகர் திலகனை நடிக்கவே விடாமல்  கொன்றது இந்த மோகன்லால்தான்...
இதையடுத்து அவர் சென்னைக்கு குடிபெயர்ந்தார். தமிழ் படங்களில் தற்போது நடித்து வருகிறார்.
ஷகிலா வாழ்க்கையை படமாக எடுக்கும் முயற்சி நடந்து வருகிறது. இதனை ஷகிலாவே உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால் வேறு இயக்குநரை வைத்து இந்தப் படத்தை உருவாக்கப் போகிறாராம்.
பேட்டி இதுகுறித்து ஷகிலா கூறுகையில், "எனது வாழ்க்கையை சினிமா படமாக எடுக்க கன்னட இயக்குநர் இந்திரஜித் லங்கேஷ் அனுமதி கேட்டார். நானும் சம்மதம் சொல்லிவிட்டேன். என் சினிமா அனுபவங்கள், சொந்த வாழ்க்கையில் நடந்த விஷயங்கள் அனைத்தும் அதில் இருக்கும்.
அந்த படத்தில் எனது கதாபாத்திரத்தில் நடிக்க இந்தி நடிகைகள் சன்னிலியோன், பிபாசா பாசு ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடக்கிறது.
மம்முட்டியை விட மலையாளத்தில் நான் நடித்த போது நிறைய சம்பாதித்தேன். ரூ.4 கோடியில் தயாரான மம்முட்டி படத்தை விட என்னை வைத்து ரூ.15 லட்சம் செலவில் எடுக்கும் படங்கள் அதிகம் வசூலித்து சக்கைபோடு போட்டன. இதனால் எனக்கு எதிராக சதி செய்து அங்கிருந்து வெளியேற்றி விட்டார்கள். ://tamil.filmibeat.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக