சனி, 2 ஜனவரி, 2016

ஆடைகட்டுப்பாடு ...கொங்குநாடு ஜனநாயக கட்சி வரவேற்கிறது,...கந்துவட்டி...ஜாதி ....கும்பல்கள் வரவேற்பு...

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள
கோயில்களில் பாரம்பரிய உடை அணிந்து வரவேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவு வரவேற்கத்தக்கது. அதை உடனடியாக நடைமுறைக்கு கொண்டுவந்த இந்து சமய அறநிலையத்துறையின் செயல் பாராட்டக்குரியது. நம் அணியும் ஆடைகளுக்கும், நமது கலாச்சாரம் மற்றும் பண்பாடு ஆகியவற்றுக்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது. கலாச்சாரம் நமது அடையாளம். நாம் கலாச்சாரத்தை மறந்தால் நமது அடையாளத்தை இழந்து விடுவோம். பாரம்பரிய உடை நமது கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை வெளிக்காட்டுகிறது.அந்த வகையில் கொங்குநாடு ஜனநாயக கட்சி இதை வரவேற்கிறது என்று அக்கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ் கூறியுள்ளார். nakkheeran,com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக