செவ்வாய், 19 ஜனவரி, 2016

ஆண்களைக் காப்பாற்ற ஒரு சட்டம்...பொய் வழக்குப் போடும் பெண்களிடம் இருந்து

இன்றைக்கும் ஆண்கள் பல வகைகளில் குடும்ப வாழ்வில் மனைவியால்
வன்முறைக்கு ஆழ்த்தப்படுவது அன்றாட நிகழ்ச்சியாகி விட்டது. உளவியல், பொருளாதாரம், உடல், பேச்சு இப்படி பலவகையிலும் கண்வன் மனவியால் துன்புறுத்தப்படுகிறான். ஆனால் அது சட்டத்தினால் அங்கீகரிக்கப்படவில்லை. குடும்ப வன்முறை என்பது கனவன் மனைவிமீது செய்வது மட்டும்தான் என்று D.V.Act வரையறுத்துள்ளது. அந்த D.V. Act படி கணவன் தலையைத் திருப்பிக் கொண்டால் கூட அது வன்முறை; உடனே மனைவி புகார் கொடுத்து கனவனை அவனுக்குச் சொந்தமான வீட்டிலிருந்தே விரட்டி அடித்து, அதற்காக மனைவிக்கு கப்பம் கட்ட வைக்கலாம். ஆனால் மனைவி கணவனை ஆண்மையற்றவன், ஒன்றுக்கும் லாயக்கில்லை என்று இன்னொரு ஆணுடன் ஒப்பிட்டு திட்டினாலும், ஏன் அடித்தால் கூட அது குற்றம் கிடையாது!

இதுபோன்ற சட்டங்கள் மாற்றப்படாவிட்டால் விபரிதமான விளைவுகள் ஏற்படும் என்று சில ஆண்டுகளாக வலியுறுத்தப் பட்டு வந்தது. மேலும் இத்தகைய முடும்ப வன்முறைகளால் பாதிக்கப்பட்டு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான ஆண்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். சாதாரணமாக பெண்கள்தான் அதிக அளவு தற்கொலை செய்து கொள்வதாக ஒரு தவறான பொய்த் தோற்றம் மக்கள் மனத்தில் உள்ளது. ஆனால் அந்த மாயத்தோற்றம் உண்மையல்ல. ஆண்களின் தற்கொலை பெண்களுடையதை விட இரண்டு பங்கு என்பதே உண்மை!

இந்நிலையில் பொய்யான பலாத்கார வழக்கு ஒன்றில் வழக்குரைஞர் நிரபராதி என்று விடுதலை செய்யப்பட்ட நிலையில், ஆண்களைப் பாதுகாக்க சட்டம் இயற்ற வேண்டிய தருணம் இது என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. வழக்குரைஞரிடம் பணியாற்றிய பெண், அவர் மீது பொய்ப் புகார் கூறியிருந்ததும் நிரூபிக்கப்பட்டுள்ளது. பலாத்கார வழக்கில், நிரபராதி என்று தீர்ப்பளிக்கப்பட்ட வழக்குரைஞர், இந்த பொய் வழக்கால் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுவிட்டதாகவும், வழக்கில் தான் நிரபராதி என்று நிரூபிக்கப்பட்டாலும், தன்னை ஒரு குற்றவாளியைப் போலவே இந்த சமுதாயம் கருதுவதாகக் கூறி தில்லி கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த மனுவை விசாரித்த கூடுதல் நீதிமன்றம் வழக்குரைஞர் நிவேதிதா அனில் ஷர்மா, மனுதாரர் குறிப்பிடும் விஷயத்தை எளிதாக விட்டுவிட முடியாது. மன அழுத்தத்தால், சமுதாயத்தால் அவர் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியிருப்பார். அவர் குற்றம்சாட்டப்பட்ட போது அனைவருக்கும் அது தெரிந்திருக்கும். ஆனால், அவர் விடுதலை செய்யப்பட்டதை யாரும் கவனித்திருக்க மாட்டார்கள். அவர் தொடர்ந்து குற்றவாளி என்ற பார்வையிலேயே பார்க்கப்படுவார். அவரது மதிப்பு, மரியாதையை மீண்டும் கொண்டு வருவது இயலாதக் காரியம். அதற்காக அவருக்கு இழப்பீடு கொடுத்தாலும் அது சரியாக இருக்காது. எனவே, இந்த நீதிமன்றம், ஆண்களை, பொய் வழக்குகளில் இருந்து காப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

ஆண்களின் மரியாதை, கௌரவம் ஆகியவற்றை காப்பாற்ற ஒருவரும் போராடுவதில்லை, அனைவருமே பெண்களின் கௌரவம், மரியாதையைக் காப்பாற்றுவது பற்றியே பேசி வருகிறோம். பெண்களைக் காப்பாற்ற ஏராளமான சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஆனால், பொய் வழக்குப் போட்டு ஒரு ஆணை குற்றவாளியாக்கும் பெண்களிடம் இருந்து ஆண்களைக் காப்பாற்ற ஒரு சட்டம் கூட இல்லை. எனவே, ஆண்களைப் பாதுகாக்க சட்டம் இயற்ற வேண்டிய தருணம் இது” என்று குறிப்பிட்டுள்ளார்.  aanthaireporter.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக