ஜல்லிக்கட்டு நடந்த இடத்துக்குச் சென்று பீட்டா அமைப்பினர் ஆதாரங்களை திரட்ட வில்லை. ஆனால், எங்களுக்காக பல்வேறு ஆதாரங்கள் தமிழகத்தில் இருந்து தமிழர் கள்தான் அனுப்பி வைத்தனர். அதனை வைத்தே நாங்கள் உச்ச நீதிமன்றத்தில் முறை யிட்டோம். நாங்கள் கொடுத்த ஆதாரத்தையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர். இதனிடையே மத்திய, மாநில அரசுகள் அவசரச் சட்டம் கொண்டு வந்தா லும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டை நடத்த முடியாது” என்று பீட்டா இந்தியா (People for the Ethical Treatment of Animals) அமைப்பின் அறிவியல் ஆலோசகர் சைதன்யா கொடூரி தெரிவித்தார்.
நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டி இதோ ஜல்லிக்கட்டில் காளை மாடுகள் துன்புறுத்துப்படுவதாக எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள்?
2010 – 2014 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியின்போது காளை மாடுகள் துன்புறுத்தப்படுவதற்கான வீடியோ ஆதாரத்தை வைத்தே உச்ச நீதிமன்றதில் வாதிட்டோம்.பீட்டா அமைப்பு ஜல்லிக்கட்டு நடந்த இடத்துக்குச் சென்று ஆதாரத்தை திரட்டியதா? உங்கள் அமைப்பச் சேர்ந்தவர்கள் ஜல்லிக்கட்டை பார்வையிட்டார்களா?
பதில்: ஜல்லிக்கட்டு நடந்த இடத்துக்குச் சென்று பீட்டா அமைப்பினர் ஆதாரங்களை திரட்டவில்லை. ஆனால், எங்களுக்காக வேறு சில அமைப்புகள் காளை மாடுகள் துன்புறுத்தியதற்கான பல்வேறு ஆதாரங்களை திரட்டிக் கொடுத்தனர். அதனை வைத்தே நாங்கள் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டோம்.
நாங்கள் கொடுத்த ஆதாரத்தையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர்.உச்ச நீதிமன்றத்தில் நீங்கள் சமர்ப்பித்த ஆதாரங்கள் போலியானவை என ஜல்லிக்கட்டு அமைப்பாளர்கள் முன்வைக்கின்றனரே?
பதில்: எங்களுக்கு பல்வேறு ஆதாரங்கள் தமிழகத்தில் இருந்து தமிழர்கள்தான் அனுப்பி வைத்தனர். அது எப்படி போலியாக இருகக முடியும்? காளை மாடுகள் துன்புறுத்தப்படுவதை சகிக்க முடியாதவர்களும், மிருகவதையை எதிர்ப்பவர்களும் எங்களுக்கு ஆதரவான ஆதாரங்களை சேகரித்து கொடுத்து ஜல்லிக்கட்டு போட்டிகளை அவசரச் சட்டம் கொண்டு வந்து அதன் மூலம் நடத்த மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்தால்?
பதில்: மத்திய அரசால் இப்போதைக்கு ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு அவசரச் சட்டத்தை கொண்டு வர முடியாது. அப்படியே கொண்டு வந்தாலும் மீண்டும் நீதிமன்றத்தை அணுகி தடை வாங்குவோம். மாநில அரசு முயற்சித்தாலும் இதுதான் நிலைமை. தமிழகத்தில் இப்போதைக்கு ஜல்லிக்கட்டை நடத்த முடியாது.
முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜூ ஜல்லிக்கட்டை வேறு பெயரில் நடத்தலாம் யோசனை சொல்லி இருக்கிறாரே?
பதில்: ஒரு ஓய்வுப் பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியே வழங்கப்பட்ட உத்தரவை மதிக்காமல் பேசுவது வேதனைக்குரிய ஒன்று. மேலும், உச்ச நீதிமன்றத்தை அவதிக்கும் வகையில் அவருடைய கருத்து இருக்கிறது, பெயரை மாற்றினால் ஜல்லிக்கட்டை நடத்தலாம் எனக் கூறுவது அபத்தம். ஜல்லிக்கட்டு என்ற பெயரில் பிரச்னை இல்லை. மிருகத்தை வதைப்பதுதான் பிரச்னை. aanthaireporter.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக