செவ்வாய், 19 ஜனவரி, 2016

ரஜினிக்கு ரூ.10 மணியார்டர் அனுப்பிய ரசிகர்...பணக்கஷ்டமாம்

தமிழக வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் கொடுத்த ரஜினிக்கு நெல்லையச் சேர்ந்த நபர் ஒருவர் ரூ. 10 மணியார்டர் னுப்பியுள்ளார்.நெல்லை மாவட்டம், திருமலையப்ப புரத்தை சேர்ந்தவர் ராமநாதன். இவர், தமிழக வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் கொடுத்த ரஜினிக்கு நெல்லையச் சேர்ந்த நபர் ஒருவர் ரூ. மணியார்டர்;அனுப்பியுள்ளார். கூடவே ஒரு கடிதமும் அனுப்பியுள்ளார்.அந்த கடிதத்தில், சென்னையில் மழை வெள்ளம் பாதிப்பின்போது, தமிழக மக்களின் நிவாரண நிதிக்காக இந்தி, தெலுங்கு என சம்பந்தமே இல்லாத குறைந்த ஊதியம் பெறும் நடிகை நடிகைகள் கூட பல லட்சம் வாரிக் கொடுத்திருக்கிறார்கள்.

ஆனால், கர்நாடகாவில் இருந்து பிழைப்பிற்காக தமிழகத்திற்கு வந்து தமிழக மக்களால் இந்திய கோடீஸ்வரர்களின் ஒருவரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தாகிய நீங்கள் வெறும் 10 லட்சம் ரூபாய் கொடுத்தது ஏன் என ரசிகர்களே கேட்கும் நிலைமை உருவானதால் உண்மையிலேயே எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை.
ஒருவேளை நீங்கள் கஷ்டப்படுகிறீர்களோ அதனால் தான் வெறும் 10 லட்சம் கொடுத்துள்ளீர்கள். உங்களுக்கு கஷ்டம் இருப்பதால் உங்களுககு உதவும் எண்ணத்தில் 10 ரூபாய் மணியார்டர் அனுப்பி வைக்கிறேன். இது போன்று இரக்கம் கொண்ட அனைத்து தமிழர்களும் ரஜினிக்கு 10 ரூபாய் அனுப்பி உதவுங்கள் என்று கூறியுள்ளார்"
 வெப்துனியா,com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக