இவர் துக்ளக் ஆண்டுவிழாவில் பேசும் பொழுது: மந்திரிங்க அதிகாரிங்களோட சேர்ந்து கொள்ளை அடிக்கிறாங்க . யாராவது நல்லவனை கண்டா நாடாள வா நாடாளா
வா என்று கூப்பிடுறாய்ங்க ...அவ்வளவு நொந்து போயி இருக்காங்க என்று பலவாறு அதிமுக ஆட்சிக்கு அர்ச்சனை செய்தார் .ஏற்கனவே இவர் கட்சி மாற முடிவெடுத்துதான் இப்படி பேசினார் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.அதிமுகவில் இருந்து எம்.எல்.ஏ. பழ.கருப்பையா கட்சியில் இருந்து
நீக்கப்பட்டுள்ளார். கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்து பதவியில் இருந்தும் பழ.கருப்பையாவை நீக்கி உத்தரவிட்டுள்ளார் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா. இவரோடு இனி எந்த அதிமுககாரனும் பேசகூடாதுன்னு இதய தெய்வம் புருடா தலைவி அறிவிச்சிருக்காங்க. இது ஒரு கட்சியா ? மாபியா இயக்கங்கள் அல்லது ஒரு நக்சல்பாரி மற்றும் தீவிரவாத இயக்கங்களில்தான் இதுபோன்ற பரஸ்பரம் சந்தேக சாம்ராஜ்யம் நடக்கும்....
இதுதொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில்,’கழகத்தின் கொள்கை, குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்களும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், வட சென்னை தெற்கு மாவட்டச் சேர்ந்த பழ.கருப்பையா (துறைமுகம் சட்டமன்ற உறுப்பினர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன்’’ என அறிவித்துள்ளார். nakkheeran,com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக