ஞாயிறு, 13 டிசம்பர், 2015

அட்டைப் பெட்டிக்குள் பிரபல ஓவியர், வழக்கறிஞர் பிணம்: மும்பையில் அதிர்ச்சி சம்பவம்

மும்பையில் பிரபல ஓவியரும், நிறுவல் கலை நிபுணருமான ஹெம உபத்யாய் (43) மற்றும் அவரது வழக்கறிஞர் ஹரிஸ் பாம்பானி (65) கொலை செய்யப்பட்டு இருவரது உடலும் அட்டைப் பெட்டிக்குள் அடைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சுபர்பான் கண்டிவலி பகுதியில் சாக்கடை ஒன்றின் அருகே சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த மும்பை கிருமினல் போலீசார், சடலங்களை மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக இதுவரை 3 பேரை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


குஜராத் மாநிலம் பரோடாவில் பிறந்த ஹேமா, தன்னுடைய கணவரும் சக கலைஞருமான சிட்டன் என்பவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்த தம்பதிகள் ஏற்கனவே விவாகரத்துக்கு விண்ணப்பித்திருந்தனர்.

முன்னதாக கணவர் சிட்டன் மீது கடந்த 2013-ல் வன்கொடுமை வழக்கு தொடுத்த ஹேமா, கணவர் ஆபாசமாக வரைவதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். அந்த வழக்கில் ஓவியர் ஹேமாவிற்கு ஆதரவாக கொலை செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர் ஹரிஸ் பாம்பானி ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது. maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக