திங்கள், 14 டிசம்பர், 2015

தலைமை செயலரின் வெளக்கெண்ணை அறிக்கை.... அளவாகத்தான் தண்ணீர் திறந்து விட்டோம்...

செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கத்தின் நிர்வாக மேலாண்மை சரியாக இல்லாத
காரணத்தினாலேயே, சென்னை நகர் வெள்ளத்தில் சிக்கியது எனக் கூறப்படுவதை தமிழக அரசு மறுத்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரி அந்த நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீரைத் திறந்துவிடுவது குறித்து சரியான நிர்வாக முடிவு எடுக்கப்படவில்லை, அதன் காரணமாகவே அடையாறு ஆற்றில் நீரின் அளவு உயர்ந்து சென்னையில் வெள்ளம் ஏற்பட காரணமாக இருந்தது என பல்தரப்பில் கருத்துக்கள் வெளியாயின.
சென்னை வெள்ளத்தால் கடும் பாதிப்புகள் ஏற்பட்டன எனவே அது தொடர்பில், உண்மை நிலை சரியாக விளக்கப்பட வேண்டிய தேவை உள்ளது எனக் கூறி, தமிழக அரசின் தலைமைச் செயலர் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். பல இடங்களில் வீடுகளில் நீர் புகுந்தது கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில், அரசின் உயரதிகாரிகள் செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கத்தில் தங்கியிருந்து நிலைமையை கவனமாக கண்கணித்து வந்தனர் எனக் கூறும் அவரது அறிக்கை, ஏரியில் நீர் நிரம்பும் வேகம் மற்றும் அளவை கணக்கில் எடுத்தே, அதிலிருந்தே கட்டுப்படுத்தப்பட்ட வகையில் நீர் திறந்துவிடப்பட்டது எனவும் கூறுகிறது.  இந்த வெளக்கெண்ணை அறிக்கைக்காகவே தனியான விசாரணை வைக்கவேண்டும்


அடையாற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக வீதிகளில் நீர் பல அடிகள் உயரத்துக்கு ஓடியது அதுவும் களநிலைகளை ஆய்வு செய்தபிறகு கட்டம் கட்டமாகவே அங்கிருந்து காலை பத்து மணி தொடங்கி மதியம் இரண்டு மணிவரை நீர் திறந்துவிடப்பட்டது என தலைமைச் செயலரின் அறிக்கை தெரிவிக்கிறது. அடையாறு ஆற்றுக்கு நீர் வந்து சேரும் பல நீர்நிலைகளின் மொத்த பரப்பளவு 808 சதுர கிமீ என்றும், அதில் செம்பரம்பாக்கம் ஏரியின் அளவு 358 சதுர கிமீ மட்டுமே எனவும் அரசின் அறிக்கை விளக்குகிறது.

அடையாற்றில் அளவுக்கு அதிகமான நீரோட்டம் இருந்தது அந்த ஆற்றுக்கு நீரை செலுத்தும் அனைத்து நீர் நிலைகளும், தமது கொள்ளளவை எட்டிய பிறகு, உபரி நீர் அதில் கலந்தது, அதுவே சென்னை வெள்ளத்துக்கு காரணமாக அமைந்தது எனவும் தமிழக அரசின் தலைமைச் செயலர் கூறுகிறார். நகரின் பல பகுதிகளில் இன்னும் இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை எந்தவொரு நீர் நிலையிலும் அதன் கொள்ளளவைவிட இரண்டு அடி குறைவாக நீர் தேக்கி வைக்கப்பட வேண்டும் என வெள்ள மேலாண்மை குறித்த அரச விதிகள் கூறுகின்றன எனவும் அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் ஆங்காங்கே குழுக்களாக உதவிகளை முன்னெடுத்தனர் பலரும் கூறுவதைப் போல, 75 சதவீதம் அளவுக்கே நீரைத் தேக்கிவைத்திருந்தாலும் இரண்டு மணி நேரம் கழித்து இப்போது ஏற்பட்டிருப்பதைப் போன்ற வெள்ளம் ஏற்பட்டிருக்கும் எனவும் தமிழக அரசின் அறிக்கை தெரிவிக்கிறது. செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நீர் திறந்து விடப்படுகிறது எனபது தொடர்பான அறிவுறுத்தலும், எச்சரிக்கையும் விடுக்கப்பட்டன எனவும் தலைமைச் செயலரின் அறிக்கை தெரிவிக்கிறது.<  bbc.tamil.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக