சனி, 19 டிசம்பர், 2015

சுப்பிரமணியம் சாமிக்கு பாஜக லஞ்சம்..பார்ப்பனீய விஷ ஊக்க போனசாக டெல்லியில் அரசு பங்களா..

Subramania swamy(C) 4
புதுடெல்லி - பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சாமிக்கு மத்திய டெல்லியில் அரசு பங்களா ஒன்றை ஒதுக்கீடு செய்து ராஜ்நாத் சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவைக் குழு உத்தரவிட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளதுடன் மத்திய அரசு மீது குற்றஞ்சாட்டியுள்ளது. பா.ஜ.க. தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான சுப்பிரமணியன் சாமிக்கு பல்வேறு அமைப்புகளால் அச்சுறுத் தல் உள்ளது.இதனால் மத்திய உள்துறை அமைச்சகம் அவரது பாதுகாப்பு குறித்து அடிக்கடி ஆய்வு செயது நடவடிக்கை எடுத்து வருகிறது.  எந்தவித சட்டத்தையும் மதிக்காமல் அரசின் ரகசிய பதவிகளில் மட்டுமே இருக்கும் இவருக்கு அமைச்சருக்கு இணையாக ஏன் இந்த சலுகை? இந்துத்வாவின் மாமாவுக்கு தொடர் சகுனி ஸ்ரீ அல்லது சகுனி பூஷன் ஏன் சகுனி விபூஷன் கூட இனி கொடுக்கலாம்

நேற்று மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் தலைமையில் வீட்டு வசதிக்காக அமைச்சரவைக் குழு கூட்டம் நடந்தது. அப்போது சுப்பிரமணியன் சுவாமிக்கு எழுந்துள்ள புது அச்சுறுத்தல் பற்றி ஆய்வு செய்யப்பட்டது. இசட் பிரிவில் அவருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு பற்றியும் விவாதிக்கப் பட்டது. அப்போது அவரது வீட்டில் இசட் பிரிவினரும் மத்திய ரிசர்வ் போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உரிய வசதி இல்லை என்று தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து  பாதுகாப்பு அம்சம் உள்ள அரசு வீட்டை ஒதுக்கீடு செய்து கொடுக்க தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி மத்திய டெல்லி பகுதியில் சுப்பிரமணியன் சாமிக்கு அரசு  பங்களா ஒதுக்கீடு செய்யப்பட்டுள் ளது. காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு எதிராக நேஷனல் ஹெரால்டு வழக்கை சுப்பிரமணியன் சாமி  தொடர்ந்துள்ளார். இதனால் காங்கிரசார் கோபம் சுப்பிரமணியன்சாமி மீது திரும்பியுள்ளது. இதையடுத்து அவருக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளும் அதி கரிக்கப்பட்டுள்ளது.
ஆயுதம் ஏந்திய மேலும் 2 போலீசார் அவரது பாதுகாப்புக்கு வருவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சுப்பிரமணியன்சாமி போல பஞ்சாப் முன்னாள் டி.ஜி.பி. கே.பி.எஸ்.கில்லுக்கும் டெல்லியில் அரசு வீடு ஒன்றை ஒதுக்கீடு செய்து கொடுத்துள்ளது. தீவிரவாத எதிர்ப்பு முன்னணி தலைவர் பிட்டாவுக்கும் டெல்லியில் வீடு வழங்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் முதல்-மந்திரி ஹரீஷ்ராவத் டெல்லியில் தங்கி சிகிச்சை பெற தனக்கு மத்திய அரசு உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
இதைத் தொடர்ந்து  அவருக்கும் டெல்லியில் பங்களா ஒன்றை மத்திய அரசு ஒதுக்கி கொடுத் துள்ளது.  சுப்பிரமணியன் சாமிக்கு அரசு  பங்களா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதற்கு காங்கிரஸ் கடும் எத்ர்ப்பு தெரிவித்து உள்ளது. பதவியில் இல்லாதவருக்கு எப்படி அரசு பங்களா ஒதுக்கலாம் , பிரதமர் மோடியின் சார்பாக சுப்பிரமணியன் சாமி செயல்படுவதற்கு பரிசுதான் பங்களா என குலாம்நபி ஆசாத் கூறி உள்ளார்.  தினபூமி.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக