ஞாயிறு, 20 டிசம்பர், 2015

பாஜகவின் நஷனல் ஹெரால்ட் வழக்கு பூமராங்காக சு.சாமியையும் பாஜகவையும் பதம் பார்க்கிறது

காங்கிரஸ் தலைவர்களான சோனியாகாந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் தங்கள் மீது சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த நேஷனல் ஹெரால்ட் பத்திரிகை வழக்கை, அரசியலுக்கான மைலேஜாக பக்காவாக பயன்படுத்திவிட்டனர். நேஷனல் ஹெரால்ட் வழக்கை முற்றிலும், ஒரு அரசியல் சார்ந்த பிரச்சினையாக மாற்றுவதில் இன்று காங்கிரஸ் முழு வெற்றி பெற்றுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். National herald case: Congress getting political mileage கோர்ட்டில் இன்று மதியம் 3 மணிக்கு சோனியா, ராகுல் ஆஜராகும் முன்பாகவே, குலாம் நபி ஆசாத், கார்கே போன்ற காங். மூத்த புள்ளிகள், செய்தியாளர்களை சந்தித்து, இவ்வழக்கு ஒரு பழிவாங்கும் நடவடிக்கை என்று திரும்ப திரும்ப கூறிக்கொண்டே இருந்தனர். காங்கிரசார் ஆங்காங்கு போராட்டங்கள் நடத்தி தங்கள் பங்குக்கு ஹைப் ஏற்றினர்.பாஜகவின் இதே தந்திரத்தைதான் கனிமொழிக்கும் ராசாவுக்கும் எதிராக பார்பன பனியாக்கள் பயன்பத்தினர். சிபியை மத்திய அரசின் மாமாவாக வேலை பார்த்தது. காங்கிரஸ் கட்சியினர் டெல்லியில் கூடி ஆலோசனைகளை நடத்தி பரபரக்க வைத்தனர். மாஜி பிரதமர் மன்மோகன்சிங்கும், கூட்டத்தில் பங்கேற்றதால், கூடுதல் பப்ளிசிட்டி கிடைத்தது. இந்நிலையில்தான், கோர்ட்டுக்கு வந்தனர் சோனியா, ராகுல். காரை விட்டு இறங்கி, இருவரும் சில அடிகள் தூரம் நடந்தே சென்றனர். அவர்கள் உடல் மொழியே, தன்னம்பிக்கையை வெளிப்படுத்துவதாக இருந்தது. தங்களை பழிவாங்கும் அரசியலின் மையப்புள்ளியாக சித்தரித்துக்கொண்டு, அரசியல் பழிவாங்கலின் தியாகத்திற்காக கோர்ட் செல்வதை போல அவர்கள் நடை, பாவனைகள் காண்பிக்கப்பட்டன. சிறிது தூரம் நடந்து சென்றதால், அனைத்து மீடியாக்களாலும் போட்டோ, வீடியோ தள்ளுமுள்ளு இல்லாமல் எடுக்க முடிந்தது. இதுபோன்ற வழக்கில், ஜாமீன் கிடைப்பது எளிது என்பதை அறிந்து இருந்தது காங்கிரஸ். அதைப்போலத்தான், நீதிபதியும் ஜாமீன் கொடுத்து வழக்கை பிப்ரவரிக்கு ஒத்தி வைத்தார். இதன்பிறகு சோனியாவுக்காக ஆஜரான கபில் சிபல், மகிழ்ச்சி பொங்க பேட்டியளித்தார். ஆச்சரியம் தரும்விதமாக, சோனியா காந்தியும், சுமார் அரை மணி நேரம் கழித்து செய்தியாளர்களை சந்தித்தார். வழக்கமாக ஏதாவது பேசிவிட்டு இடத்தை காலி செய்யும் சோனியா, நிருபர்கள் கேள்விக்காக காத்திருந்ததை கவனிக்க முடிந்தது. முடிந்த அளவுக்கு, மீடியா பப்ளிசிட்டி இவ்விவகாரத்தில் இருக்க வேண்டும் என்பதை காங்கிரஸ் திரும்ப திரும்ப உறுதி செய்தபடி இருந்தது. அவ்வளவு ஏன், மவுன மோகன் சிங் என்று, பாஜகவால் வர்ணிக்கப்படும், மன்மோகன்சிங்கும் தானாக முன்வந்து நிருபர்களுக்கு பேட்டி கொடுத்து சென்றார் என்றால், காங்கிரசின் வியூகத்தை புரிந்துகொள்ளுங்கள். இவர்கள் அத்தனை பேருமே திரும்ப திரும்ப சொன்னது இந்த வழக்கு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்பதைத்தான். இதில் கவனிக்கப்பட வேண்டிய மற்றொரு அம்சம், அடுத்த வாய்தாவுக்கு கோர்ட்டில் நேரில் ஆஜராவதில் இருந்து தங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று சோனியா, ராகுல் தரப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்யவேயில்லை. மீண்டும், வழக்கிற்கு இதேபோன்ற பப்ளிசிட்டியுடன் தாங்கள் ஆஜராக வேண்டும் என்ற நோக்கம் அதில் இருப்பதாக மூத்த பத்திரிகையாளர் ஒருவர் தெரிவிக்கிறார். சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கை, தங்களுக்கு சாதகமாக்கிக்கொண்டு, இழந்த தங்கள் செல்வாக்கை மக்கள் மத்தியில் திரட்ட காங்கிரஸ் கடுமையாக உழைப்பது கண்கூடாகியுள்ளது. சுப்பிரமணியன் சுவாமி பாஜகவில் சேருவதற்கு வெகு காலம் முன்பே தொடரப்பட்ட இந்த வழக்கை, பிரதமர் மோடியுடன் தொடர்புபடுத்தி காங்கிரசார் பேட்டியளித்துவருவதன் பின்னணியிலும், அரசியல் மைலேஜ்தான் காரணம் என்கின்றனர் பாஜக நிர்வாகிகள். சுப்பிரமணியன் சுவாமி தற்போது பாஜகவில் இருப்பதாலும், அவருக்கு அரசு வீடு தந்துள்ளதோடு, ஏற்கனவே கொடுக்கப்பட்ட இசெட் பிளஸ் பாதுகாப்பை தொடருவதாலும், இந்த வழக்கை மோடியோடு இணைத்துவிடுவது காங்கிரஸ் தலைமைக்கு ரொம்ப எளிதான வேலையாக உள்ளது. மக்களுக்கும், அந்த ஒரு பிம்பத்தை கொண்டுவருவதில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. இப்போது பாஜக தடுப்பாட்டம் ஆட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

Read more at: /tamil.oneindia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக