சனி, 19 டிசம்பர், 2015

ராஜ்யசபா நியமன எம்பீக்கள் மக்கள் வரிப்பணத்தில் சச்சின் நடிகை ரேகா போன்றவர்கள் வேஸ்ட் /உல்லாசம் ..

புதுடில்லி: ராஜ்யசபா நியமன எம்.பி.,க்களில், முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின், நடிகை ரேகா ஆகியோர், 6 சதவீதத்துக்கும் குறைவான நாட்களே சபை நடவடிக்கைகளில் பங்கேற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜ்யசபாவில், 12 நியமன எம்.பி.,க் கள் உள்ளனர். இவர்களில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின், பாலிவுட் நடிகை ரேகா, கவிஞர் ஜாவேத் அக்தார், காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் உள்ளிட்ட, 10 பேர் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட்டு, ராஜ்யசபாவில் அவர்களின் செயல்பாடுகள் குறித்த விவரங்களை, இணையதளம் ஒன்று வெளியிட்டுள்ளது;  கட்சி விளம்பரத்துக்காகவும், ஒரு பரபரப்புக்காவும், ராஜ்யசபா நியமன உறுப்பினர்களாக, இப்படி வேலைக்கு ஆகாத ஆட்களை நியமிக்கிறதை விட்டுட்டு, சாதாரண விவசாயிகள், கல்வியாளர்கள், பொருளாதார வல்லுனர்கள் இவர்களை நியமித்தால் தேவலை.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
சச்சின், நியமன எம்.பி.,யாக பதவியேற்றதிலிருந்து, இதுவரை, 5.5 சதவீத நாட்களே, சபை நடவடிக்கைகளில் பங்கேற்றுள்ளார்.நடிகை ரேகாவும், 5.1 சதவீத நாட்களே வருகை தந்துள்ளார். பாடலாசிரியர் ஜாவேத் அக்தார், 52 சதவீத நாட்களும், நாடக கலைஞர் ஜெயஸ்ரீ, 56 சதவீத நாட்களும் வருகை தந்துள்ளனர். அதிகபட்சமாக, காங்கிரசைச் சேர்ந்தவரும், பொருளியல் நிபுணருமான பாலசந்திர முங்கேகர், 89 சதவீத நாட்கள் வருகை தந்துள்ளார்சபை நடவடிக்கைகளில் அதிக கேள்வி கேட்ட நியமன எம்.பி.,க்களின் பட்டியலில், பாலசந்திர முங்கேகரின் பெயர், 272 கேள்விகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது. மணிசங்கர் அய்யர், 178 கேள்விகளுடன், இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். சச்சின், ஏழு கேள்விகள் கேட்டுள்ளார். ரேகா, ஒரு கேள்வி கூட கேட்கவில்லை. சபை விவாதங்களில் பங்கேற்றவர்களின் பட்டியலில், மணிசங்கர் அய்யர் முதலிடத்தையும், பாலசந்திர முங்கேகர் இரண்டாமிடத்தையும் பிடித்துள்ளனர். சச்சின், ரேகா ஆகியோர் சபை விவாதங்கள் எதிலும் பங்கேற்கவில்லை  தினமலர்com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக