சனி, 5 டிசம்பர், 2015

சவுதி பணிப்பெண்ணுக்கு ஆதவரவாக சுமந்திரனை பேசவிடாது பாராளுமன்றில் கூச்சல் போட்ட முஸ்லிம் அமைச்சர்கள் எம்பீக்கள்


இலங்­கையைச் சேர்ந்த பணிப்பெண் ஒரு­வரை ஷரி ஆ சட்­டத்தின் பிர­காரம் கல்லால் எறிந்து மரண தண்­டனை நிறை­வேற்­று­வ­தற்கு அளிக்­கப்­பட்டுள்ள தீர்ப்பு தொடர்பில் நேற்று பாரா­ளு­மன்­றத்தில் சர்ச்சை நிலை ஏற்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­திரன் மேற்­படி தண்­ட­னைக்கு எதிர்ப்பு வெளி­யிட்ட நிலையில்
சுமந்­திரன் எம்.பி.யின் இச்­செ­யற்­பாட்­டுக்கு அமைச்சர் ரிஷாத் பதி­யூதீன், உறுப்­பி­னர்­க­ளான நவவி, மரிக்கார் மற்றும் இஷாக் ஆகியோர் எதிர்ப்­புக்­களை தெரி­வித்­தனர். இதனால் சபையில் கூச்சல் குழப்பம் ஏற்­பட்­டது.; பாரா­ளு­மன்­றத்தின் நேற்று வெள்ளிக்கிழமை அமர்­வின்­போது இடம்­பெற்ற 2016 ஆம் நிதி­யாண்­டுக்­கான வரவு செலவுத் திட்­டத்தின் இரண்டாம் நாள் குழு நிலை விவா­தத்தில் பேசிக் கொண்­டி­ருந்த சுமந்­திரன் எம்.பி, இலங்­கையைச் சேர்ந்த பணிப்பெண் ஒருவர் சவூ­தியில் கல்லால் எரிந்து மரண தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்ளார் என்றும் அதற்­காக தனது கவலையை வெளி­யி­டு­வ­தா­கவும் கூறினார்.
சுமந்திரன் எம்.பி. குறிப்பிடுகையில்
இஸ்­லாத்தைப் பின்­பற்­று­ப­வர்­க­ளுக்கு நான் எதி­ரா­னவன் அல்ல என்­பதால் நான் கூறு­கின்ற கருத்­துக்கள் இஸ்­லாத்­துக்கோ அல்­லது அதனைப் பின்­பற்­று­வோ­ருக்கோ எதி­ரா­ன­தாக இருக்­காது.
இலங்கைப் பெண் ஒருவரைக் கல்லால் எரிந்து மரண தண்­டனை நிறை­வேற்­று­மாறு தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டுள்­ளது. இது போன்­ற­தொரு தண்டனை 2013 இலும் நிறை­வேற்­றப்­பட்­டது. ரிசானா என்ற யுவ­தியும் தலை துண்­டிக்­கப்­பட்டு மரண தண்­ட­னைக்­குள்­ளாக்­கப்­பட்டார்.
இவ்­வாறு பழ­மை­வாத சட்­டங்­களே பல நாடு­களில் பயன்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன. நாக­ரீக சமூ­கத்தில் நாம் வாழ்ந்து கொண்­டி­ருக்­கின்றோம்.
நான் கிறிஸ்­தவ மதத்­ததைப் பின்­பற்­று­பவன், அதிலும் கல்லால் எரிந்து மரண தண்­டனை நிறை­வேற்றும் முறைமை இருந்­தது.
விப­சா­ரத்தில் ஈடு­பட்ட பெண் ஒரு­வரை இயே­சு­நா­த­ரிடம் அழைத்து வந்­தார்கள். அவரை கல்லால் எரிந்து கொல்லவேண்டும் என்று வலியு­றுத்­தினர்.
இதன்­போது இயே­சு­தூதர் கூறி­யது என்­ன­வெனில் உங்­களில் பாவம் செய்­யா­த­வர்கள் எவரோ அவரே இந்தப் பெண்­மீது முதல் கல்லை எரி­யட்டும் என்று கூறினார். அந்தச் சந்­தர்ப்­பத்தில் கற்­க­ளுடன் வந்­த­வர்கள் திரும்பிச் சென்­று­விட்­ட­தாக வேதா­க­மத்தில் கூறப்­ப­டு­கி­றது என்றார்.
இதன்போது சுமந்­திரன் எம்.பி. ஷரி ஆ சட்டம் என்று தொடங்கி ஏதோ கூற­முற்­பட்­ட­போது மரிக்கார் எம்.பி. கூச்­ச­லிட்டார். அவ­ருடன் இணைந்து கொண்ட அமைச்சர் ரிஷாத் பதி­யூதின் மற்றும் எம்.பி.க்களான நவவி மற்றும் இஷாக் ரஹ்மான் ஆகி­யோரும் கூச்­ச­லிட்­டனர். அத்­துடன் இஸ்­லாத்தின் சட்­டத்தை சுமந்­திரன் விமர்­சிப்­ப­தாக சுமந்­திரன் எம்.பி.க்கு எதிர்ப்பை வெ ளியிட்டனர்.
இந்த சந்­தர்ப்­பத்தில் தலை­யீடு செய்த சபா­நா­யகர் இடை­யூ­று­களை ஏற்­ப­டுத்த வேண்டாம் என்று முஸ்லிம் உறுப்­பி­னர்­களைக் கேட்டுக்கொ­ணடார். எனினும் அதற்கு செவி­ம­டுக்­கப்­ப­ட­வில்லை.
மரிக்கார் எம்.பி. தொடர்ந்தும் கூச்­ச­லிட்டுக் கொண்­டி­ருந்­த­மையால் சபா­நா­யகர் அவ­ருக்கு எச்­ச­ரிக்கை ஒன்­றையும் விடுத்தார். ஆசனத்தில் அமர்ந்து கொள்­ளு­மாறு உங்­க­ளுக்கு மூன்று தட­வை­க­ளுக்­குமேல் கூறி­விட்டேன் என்று சத்­த­மாக கூறினார்.
இதன்­போது தொடர்ந்தும் உரை­யாற்­றிய சுமந்­திரன் எம்.பி, நான் இஸ்­லாத்­துக்கோ அல்­லது இஸ்­லா­மி­யர்­க­ளுக்கோ எதி­ராக எத­னையும் கூற­வில்லை. நான் முஸ்­லிம்­க­ளுக்கா குரல் கொடுத்­த­மைக்­காக பாரிய விமர்­ச­னமும் என்­மீது வைக்­கப்­பட்­டது என்றார். எனினும் ரிஷாத் பதி­யூதின் சுமந்­திரன் எம்.பி.மீது கடு­மை­யான விமர்­ச­னங்­களை முன்­வைத்தார்.
இதே­வேளை சபை­மு­தல்வர், லக்ஸ்மன் கிரி­யெல்ல அமைச்சர் நவீன் திசாநாயக்க மற்றும் பிரதி அமைச்சர் அஜித்த பி.பெரேரா ஆகியோர் சுமந்திரன் எம்.பி. உரையாற்றுவதற்கான சந்தர்ப்பத்தை பெற்றுக் கொடுக்குமாறு சபாநாயகரைக் கேட்டுக் கொண்டனர்.
எனினும் உறுப்பினர்கள் மூவரும் தொடர்ந்தும் கூச்சலிட்டு இடையூறு விளைவித்தமையடுத்து சபாநாயகர் கருஜயசூரிய கடும்தொணியில் இடையூறுகளை முடிவுக்கு கொண்டு வந்தார். thinakaran.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக