ஞாயிறு, 8 நவம்பர், 2015

அவசரப்பட்டு பாஜகவினர் வெடி கொழுத்தி சங்கு ஊதி லட்டு கொடுத்து......அப்புறம் நிதீஷின் வெற்றியை கொண்டாடினாய்ங்க

பாட்னா: பீகார் சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னணிலை வகித்ததால் அக்கட்சி தொண்டர்கள் சங்கு ஊதியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். ஆனால் சிறிது நேரத்துக்கு பின்னர் பா.ஜ.க. பின் தங்கியிருப்பதாக தேர்தல் முடிவுகள் வெளியானதால் அக்கட்சி தொண்டர்கள் ஏமாற்றமடைந்தனர். பீகாரின் 243 சட்டசபை தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. தொடக்கத்தில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை வகித்ததாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன. இதனைத் தொடர்ந்து பாட்னாவில் பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் சங்கு ஊதியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக