ஞாயிறு, 8 நவம்பர், 2015

Bihar : நிதீஷ் கூட்டணி 178, பாஜக கூட்டணி 59 இதர அணிகள் 6...பாஜக படுதோல்வி...

பாட்னா: நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பீகார் சட்டசபை தேர்தலில் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி படுதோல்வியை சந்தித்துள்ளது. பீகாரில் மொத்தம் உள்ள 243 சட்டசபை தொகுதிகளுக்கு அக்டோபர் 12-ந் தேதி முதல் நவம்பர் 5-ந் தேதி வரை 5 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற்றது. இத்தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகியவை மெகா கூட்டணி அமைத்து போட்டியிட்டன.
ஐக்கிய ஜனதா தளமும், ராஷ்டிரிய ஜனதா தளமும் தலா 101 தொகுதிகளிலும் காங்கிரஸ் 41 தொகுதிகளிலும் போட்டியிட்டது. பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணியில் லோக் ஜனசக்தி, ராஷ்டிரிய லோக் சமதா, இந்துஸ்தான் மோர்ச்சா ஆகியவை இணைந்துள்ளன. இதில் பா.ஜ.க. 160, லோக் ஜனசக்தி 40, ராஷ்டிய லோக் சமதா 23, மோர்ச்சா 20 இடங்களில் போட்டியிட்டன. தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை வகித்து வந்தது. இதனைத் தொடர்ந்து பா.ஜ.க. தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டங்களில் இறங்கினர். ஆனால் இந்த மகிழ்ச்சி ஒரு மணிநேரம் கூட நீடிக்கவில்லை. ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான மெகா கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்துள்ளது. பாரதிய ஜனதா கூட்டணி படுதோல்வியை சந்தித்துள்ளது. ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான கூட்டணி 178 இடங்களில் வென்றுள்ளது. பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி 59 இடங்கள் கிடைத்துள்ளது. மற்ற கட்சிகளுக்கு 6 இடங்கள் கிடைத்துள்ளன. இதனைத் தொடர்ந்து பீகார் முதல்வராக நிதிஷ்குமார் தொடருகிறார் Read more at: http://tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக