திங்கள், 23 நவம்பர், 2015

மதத்துடன் பயங்கரவாதத்தை இணைக்க வேண்டாம்: மலேஷியாவில் பிரதமர் மோடி ....குஜாராத்தில் வேறென்ன நடந்தது?

கோலாலாம்பூர் : ''மதத்தையும், பயங்கரவாதத்தையும் தனியே பிரிக்க வேண்டும்; அவை இரண்டையும், ஒன்றாக இணைக்க வேண்டாம்,'' என, பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.< மூன்று நாள் பயணமாக மலேஷியா சென்ற பிரதமர் மோடி, இரண்டாவது நாளான நேற்று, கோலாலம்பூரில், இந்திய வம்சாவளியினரின் கூட்டத்தில் உரையாற்றினார். ;அப்போது அவர் பேசியதாவது: உலகிற்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக, பயங்கரவாதம் உள்ளது; அதற்கு எல்லை இல்லை. பயங்கரவாதிகள், தங்கள் நோக்கத்தை நிறைவேற்ற, மதத்தை பயன்படுத்தி, மக்களை இழுக்கின்றனர். ஆனால், பயங்கரவாதத்திற்கு, அனைத்து மதத்தினரும் பலியாகின்றனர். அதனால், பயங்கரவாதத்தில் இருந்து, மதத்தை தனியே பிரிக்க வேண்டும். இரண்டுக்கும் இடையே, ஒரே ஒரு வித்தியாசம் தான் உள்ளது. ஒரு தரப்பிற்கு, மனிதநேயத்தின் மீது நம்பிக்கை உள்ளது. மற்றொரு தரப்பிற்கு, அதில் நம்பிக்கை இல்லை; அவ்வளவு தான்.   தங்கள் நோக்கத்தை நிறைவேற்ற, மதத்தை பயன்படுத்தி, மக்களை இழுக்கின்றனர். // மறுக்க முடியாத உண்மைதான்.ஆனால் இதை தானே இந்தியாவில் நீங்கள் செய்கிறீர்கள். இத்தகைய பேச்சை நீங்கள் இந்தியாவில் வந்து நம் இந்தியர்களுக்காக பேசினால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும். மலேசியாவில் தமிழில் சிறிது பேசினீர்கள். வரவேற்கத்தக்கது.ஆனால் இதையே ஏன் இந்தியாவில் கடை பிடிக்க மாட்டேன் என்கிறீர்கள். தமிழ் நாட்டுக்கு வந்து ஹிந்தி இல் பேசுகிறீர்கள். அரசு விளம்பரங்கள் அனைத்தும் ஹிந்தியில் வருகிறது. அப்படியென்றால் உங்களுடைய நல்லிணக்கம், ஒற்றுமை, சகிப்புதன்மை போன்றவை இந்தியாவிற்கு அப்பாற்பட்டது தானே.?
நாம், சமூகத்துடன், குறிப்பாக, இளைய சமுதாயத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டும். எந்த நாடும், பயங்கரவாதத்தை ஊக்குவிக்கக் கூடாது; பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தரக் கூடாது; நிதி, ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கக் கூடாது. இதை, வலியுறுத்தி, அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து, பயங்கரவாதத்திற்கு எதிராக போராட வேண்டும். பயங்கரவாதிகளுக்கு ஆள்பிடிக்கும் தளமாக, இணையத்தை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது.

நம் முன் உள்ள மிகப் பெரிய சவாலை, உலக நாடுகள் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும். நம்மால், புலனாய்வு தகவல் பரிமாற்றத்தில் பரஸ்பர ஒத்துழைப்பை பலப்படுத்த முடியும். பயங்கரவாதத்தை ஒழிக்க, ராணுவத்தையும், சர்வதேச சட்ட நடைமுறைகளையும் பின்பற்ற வேண்டும். இந்தியாவின் வலிமை, அதன் பன்முகத்தன்மையில் அடங்கியுள்ளது. இந்தியாவில் தொழில்கள் பெருகவும், அனைவருக்கும் வீடு, கழிப்பறை வசதி, குடிநீர், ஆரோக்கிய பராமரிப்பு, கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்கவும், மத்திய அரசு பாடுபட்டு வருகிறது. இந்தியாவின் வளர்ச்சி வேகம், தற்போது அதிகரித்துள்ளது. சர்வதேச மந்த நிலையிலும், இந்திய பொருளாதாரம், 7.5 சதவீத வளர்ச்சியை நோக்கி நடைபோட்டு வருகிறது. இது, வரும் ஆண்டுகளில் மேலும் அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.<>இன்று சிங்கப்பூர்:*பிரதமர் மோடி, இரண்டு நாள் பயணமாக, இன்று மாலை, மலேஷியாவில் இருந்து, சிங்கப்பூர் செல்கிறார். அங்கு, ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டத்தில், அவர் உரையாற்றுகிறார்
*நாளை காலை, சிங்கப்பூர் தொழிலதிபர்களுடன் விருந்தில் பங்கேற்கிறார். அப்போது, இந்தியாவில் முதலீடு செய்யும்படி, அவர் கோரிக்கை விடுக்கஉள்ளார்
*சிங்கப்பூர் பிரதமர் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை மோடி சந்தித்து பேசுகிறார்
*நாளை மாலை, சிங்கப்பூரில் வசிக்கும் இந்தியர்களின் கூட்டத்தில் அவர் உரையாற்றுகிறார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க பதிவு செய்துள்ளோருக்கு, மோடி தனிப்பட்ட மின்னஞ்சல்களை அனுப்பி உள்ளார்
*அதில், கூட்டத்தில் உரையாற்றுவதற்கான கருத்துகள் குறித்து ஆலோசனை வழங்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்
*சிங்கப்பூர் மக்கள் தொகை, 55 லட்சம்; இதில், 3.50 லட்சம் பேர் இந்தியர்கள்
*இந்தியா - சிங்கப்பூர் இடையே, 1.12 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு, பரஸ்பர வர்த்தகம் நடக்கிறது
*இந்தியாவில், அதிக அளவில் நேரடியாக முதலீடு செய்யும் வெளிநாடுகளில், சிங்கப்பூர், இரண்டாவது இடத்தில் உள்ளது.

விவேகானந்தர் சிலை திறப்பு:

மலேஷியாவில், பெடாலிங் ஜெயா என்ற இடத்தில் உள்ள ராமகிருஷ்ண மடத்தில், விவேகானந்தர் சிலையை, பிரதமர் மோடி திறந்து வைத்தார். அவரை, ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி சுப்ரியானந்தா வரவேற்றார். இந்நிகழ்ச்சியில், அஜய் சாஹூவின் யோகா நுாலையும், மோடி வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில், 2,000க்கும் அதிகமான இந்தியர்கள் கலந்து கொண்டனர்; இவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள். கோல்கட்டாவைச் சேர்ந்த ஸ்தபதி, அனில்குமார் கோஷ், 12 அடி உயரத்தில், விவேகானந்தரின் வெண்கலச் சிலையை உருவாக்கியுள்ளார். இந்தியாவில், பேலுார் மடத்தைச் சேர்ந்த ஒரு பக்தர், இந்த சிலையை காணிக்கையாக வழங்கியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் மோடி பேசியதாவது:சுவாமி விவேகானந்தர் என்பது, ஒரு மனிதரின் பெயர் அல்ல; அது, இந்திய ஆத்மாவின் பெயர்; 1,000 ஆண்டுகள் பழமையான, உன்னதமான இந்திய கலாசாரத்தின் அடையாளம். இந்தியா, உபநிஷத்தில் இருந்து, உபகிரகா என்ற செயற்கைக்கோள் யுகத்திற்கு முன்னேறியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

திருக்குறளில் அசத்திய மோடி:

பிரதமர் மோடி பேசும்போது, மலேஷியாவில் வசிக்கும் தமிழர்களை மிகவும் புகழ்ந்தார்;
அவர் பேசியதாவது: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு, மலேஷியாவில் வசிக்கும் இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள், பெரும் பங்காற்றியுள்ளனர். சுதந்திர போராட்டத்தின்போது, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், இந்திய தேசிய ராணுவத்தை துவக்கினார். அப்போது, அதில் இணைந்தவர்களில் பெரும்பாலானோர், இங்கு வசிக்கும் தமிழர்களின் முன்னோர்களே. இங்குள்ள தமிழர்களின் அன்புக்கும், நட்புக்கும், என் இதயத்தில் எப்போதும் தனி இடம் உண்டு. இவ்வாறு அவர் பேசினார். அப்போது, 'முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு' என்ற திருக்குறளையும் மேற்கோள் காட்டி பேசினார். பின், 'ஒருவரை பார்த்ததும், முகம் மட்டும் மலரும்படியாக பழகுவது நட்பல்ல; மனதுடன் மனம் மகிழ உள்ளன்புடன் பழகும் நட்பே, சிறந்த நட்பாகும்' என, அந்த திருக்குறளுக்கான விளக்கத்தையும் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக