திங்கள், 23 நவம்பர், 2015

வர்த்தகர் காங்கிரஸ் பிரிவு தலைவர் பதவியில் இருந்து எச்.வசந்த குமார் நீக்கம்

காங்கிரஸ் வர்த்தக பிரிவு தலைவர் பதவியில் இருந்து வசந்தகுமார் நீக்கப்பட்டார்.
இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவராக செயல்பட்டு வரும் எச்.வசந்த குமார் கூடுதல் பொறுப்பாக தமிழ்நாடு வர்த்தகர் காங்கிரஸ் பிரிவு தலைவராகவும் இருந்து வருகிறார்.
அவர் தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவராக தொடர்ந்து நீடிப்பார். அவர் இன்று முதல் வர்த்தகர் காங்கிரஸ் பிரிவு தலைவர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.  இவரது அண்ணன் குமரி அனந்தனின் மகள்தான்  தமிழக பாரதீய ஜனதா கட்சியின் தலைவி தமிழிசை  சௌந்தரராஜன். காங்கிரஸ் வந்தாலும் பாஜக வந்தாலும் ரொம்ப வசதிதாய்ன்.

தமிழ்நாடு காங்கிரஸ் வர்த்தகர் பிரிவின் புதிய தலைவராக எம்.எஸ்.திரவியம் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியின் வர்த்தக சமுதாயத்தினர் அனைவரும் அவருக்கு ஒத்துழைப்பு வழங்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  tamilnewsbbc.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக