புதன், 25 நவம்பர், 2015

பெங்களூர் கல்லூரி மாணவிகளுடன் ராகுல் கலந்துரையாடல்...வழக்கம்போல சொதப்பல்...

பெங்களூரில் உள்ள மவுண்ட் கார்மெல் கல்லூரி மாணவிகளுடன் காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி  இன்று கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியில் மாணவிகள் மத்தியில் பேசிய ராகுல் மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் பயன்தருகிறது என்று நினைக்கீறிர்களா? என்று கேட்டார். இதற்கு மாணவிகளில் பெரும்பாலானவர்கள் ஆமாம் என்று கூற, ராகுல் சற்று அதிர்ச்சியடைந்தார். ஆனால், சூழ்நிலையை புரிந்துகொள்ளாமல் மீண்டும் மேக் இன் இண்டியா திட்டம் சிறப்பானதா? என்று கேட்டார். இதற்கும் மாணவிகள் ஆமாம் என்று கூறியதால், தர்மசங்கடத்திற்கு ஆளான ராகுல் ஓ.. நீங்கள் அப்படி நினைக்கிறீங்க.. என்று சமாளித்தார். ஆனால், மூன்றாவது கேள்வி கொஞ்சம் பரவாயில்லை என்றுதான் கூறவேண்டும். இளைஞர்களுக்கு போதுமான வேலை கிடைக்கிறதா? என்ற கேள்விக்கு மாணவிகள் மத்தியில் ஆமாம், இல்லை என்ற பதில்கள் கிடைத்தது.


காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்து தூக்கியெறியப்பட்ட பிறகு முதல் முறையாக மேற்கொள்ளப்பட்ட நேரடி கலந்துரையாடல் நிகழ்ச்சி ராகுலுக்கு சரியாக அமையவில்லை என்பதுடன், இந்த நிகழ்ச்சியானது பெரும்பாலான தேசிய ஊடகங்களில் நேரடியாக ஒளிப்பரப்பப்பட்டது என்பதை ராகுல் மறந்துவிட்டார் என்றுதான் கூறவேண்டும். மாலைமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக