புதன், 25 நவம்பர், 2015

ரஷ்ய விமானத்தை துருக்கி சுட்டு வீழ்த்தியதற்கு அமெரிக்கா ஆதரவு

சிரியாவின் மீது வான் தாக்குதலில் ஈடுப்பட்டிருந்த ஒரு ரஷ்ய போர் விமானத்தை துருக்கி சுட்டு வீழ்த்தியதற்கு, அமெரிக்கா தனது ஆதரவை தெரிவித்துள்ளது. துருக்கிய அதிபர் ரெஜெப் தயிப் எர்துவானுடன் தொலைப்பேசி மூலம் பேசிய அமெரிக்க அதிபர் ஒபாமா, துருக்கி தனது இறையாண்மையைப் பாதுகாத்துக்கொள்ள அதற்கு உரிமை என்று தெரிவித்துள்ளார். துருக்கியின் இஸ்லாமிய அரசு ஆயுததாரிகளை பாதுகாப்பதையே இச்செயல் காட்டுகிறது என்று ரஷ்ய பிரதமர் திமித்ரி மெட்வியதேவ் தெரிவித்துள்ளார். ஐஎஸ் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் எண்ணெய் விற்பனையின் மூலம் சில துருக்கிய அதிகாரிகள் பணம் சம்பாதிப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். துருக்கியுடனான ரஷ்யாவின் கூட்டுத் திட்டங்கள் ரத்து செய்யப்படலாம் என்றும், ரஷ்ய சந்தையிலிருந்து துருக்கிய நிறுவனங்கள் வெளியேற்றப்படலாம் என்றும் மெட்வியதேவ் தெரிவித்துள்ளார். துருக்கியின் வான் பரப்புக்குள் ரஷ்யா அத்துமீறி நுழைந்ததாக துருக்கி கூறுகிறது. ஆனால் சிரியாவின் எல்லையில் தான் தமது விமானம் பறந்ததாக ரஷ்யா வலியுறுத்தியுள்ளது.bbc.tamil.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக