புதன், 25 நவம்பர், 2015

ஏ.ஆர்.ரகுமான் :சகிப்புத்தன்மை பிரச்சனையை நானும் சந்தித்தேன்...திலீப்குமாருக்கு இது தேவையா?

இசையமைப்பாளர் சேகர் மகன் திலீப்குமார் மதம் மாறி ரஹ்மான் ஆனதில் பிரச்சனை ஒன்றும் இல்லை, ஆனால் ரஹ்மான் திலீப்குமார் ஆக முடியுமா? அந்த சுதந்திரம் ரஹ்மானுக்கு  கிடைக்குமா?   கொஞ்சம்  யோசிச்சு பாருங்க ரஹ்மான் சார்..
சகிப்புத்தன்மை குறித்து பாலிவுட் நடிகர் அமீர்கான் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியிருக்கும் சூழலில், நானும் அது போன்ற சூழ்நிலையை சந்தித்துள்ளேன் என்று இசையமைப்பாளர் கூறியுள்ளர். சமீபத்தில், சகிப்புத்தன்மை குறித்து நடிகர் அமீர்கான் தெரிவித்த கருத்திற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. அவரது வீட்டின் முன்பு போராட்டங்களும் நடைபெற்றது. டெல்லியில், அமீர்கானுக்கு எதிராக போலீஸில் புகாரும் கொடுக்கப்பட்டது. இந்நிலையில், இது போன்ற சூழ்நிலையை நானும் சந்தித்தேன் என்று ஏ.ஆர்.ரகுமான் கருத்து தெரிவித்தார். சில மாதங்களுக்கு முன் ஈரானிய திரைப்படமான  “முகம்மது மெஸேஞ்சர் ஆப் காட்” என்ற திரைப்படத்துக்கு ரகுமான் இசை அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவருக்கு எதிராக பத்வா விதிக்கப்பட்டது.
கோவாவில் நடைபெற்ற  நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ரகுமான், அந்த சம்பவத்தை குறிப்பிட்டார். மேலும் அவர் பேசும் போது “நாம் எதையும் அழகாக கையாளவேண்டும். மற்ற நாடு மக்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டும். ஏனெனில், நாம் மகாத்மா காந்தி வாழ்ந்த  மண்ணில் இருந்து வருகிறோம் ” என்று கூறினார்.   webduniya.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக