வெள்ளி, 13 நவம்பர், 2015

தண்ணீரில் தள்ளாடுது தமிழகம்..ஊத்தி (கெ)கொடுத்த வானம்...

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு முதல் பெய்த கனமழையால், பெரும்பாலான இடங்களில் தண்டவாளங்கள் நீரில் மூழ்கின. இதனால், சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய நவஜீவன் எக்ஸ்பிரஸ், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன காலை 11:30 மணிக்கு புறப்பட வேண்டிய வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்பட்டு, மதியம், 12:00 மணிக்கு பயணிகள் ரயிலாக இயக்கப்பட்டது. வாரம், இருமுறை இயக்கப்படும் திருவனந்தபுரம் - ஷாலிமர் எக்ஸ்பிரஸ், பெங்களூரு - பாட்னா எக்ஸ்பிரஸ் ரயில்கள், பெரம்பூர் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டன. திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில், திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றது. சென்னை சென்ட்ரலில் இருந்து காலை, 7:30 மணிக்கு புறப்பட வேண்டிய தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் பிற்பகல், 1:30 மணிக்கும்; காலை, 7:15 மணிக்கு புறப்பட வேண்டிய திருவனந்தபுரம் மெயில் மதியம், 12:30 மணிக்கும் புறப்பட்டு சென்றன. தென் மாவட்டங்களில் இருந்து, சென்னை எழும்பூருக்கு வர வேண்டிய ரயில்கள், பல மணி நேரம் தாமதமாக வந்தன.


*கனமழையால், சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே மின்சார ரயில் சேவையும் முடங்கியது. கிண்டி, சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் தண்டவாளங்கள் மழைநீரில் மூழ்கியதால், மின்சார ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. இந்த வழித்தடத்தில், பராமரிப்பு பணிகள் நடந்ததால், 45 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்பட்டன.

*சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில், திருவொற்றியூர் வரை மின்சார ரயில் சேவை நிறுத்தப்பட்டது.

*சென்னை சென்ட்ரல் - பட்டாபிராம் மார்க்கத்தில், ஒன்றரை மணி நேர இடைவெளியில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

*சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் மார்க்கத்தில், ஒரு மணி நேரத்துக்கு, ஒரு ரயில் இயக்கப்பட்டது

ஆலப்புழா ரயில் புறப்படும் நேரம் மாற்றம்: சென்னையி்ல் இருந்து ஆலப்புழா செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று இரவு 8.45 மணிக்கு பதிலாக இரவு 10.45 மணிக்கு புறப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள் தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக