வெள்ளி, 13 நவம்பர், 2015

400 மேல்பட்ட படங்கள் முடக்கம்...தியேட்டர்களில் டிக்கெட் விலையோ கொள்ளையோ கொள்ளை.....

கனிமொழி நவீன் : மெல்ல தமிழ் சினிமா இனி சாகும் !
தலைப்பை பார்த்தால் பகீரென்று தான் இருக்கும் ஆனால் இன்றைய தமிழ் சினிமாவின் உண்மை நிலை இது தான்..வாரம் பத்து படங்கள் ரிலீஸ் ஆகிறது. எத்தனை படங்கள் போட்ட முதலீடையாவது எடுக்கிறது என்றால் பெரிய பூஜ்யத்தை தான் சொல்ல வேண்டும். இன்றைய தமிழ் சினிமாவில் உட்கார்ந்த இடத்தில் சம்பாதித்து கொண்டிருப்பது யாரென்று தெரியுமா…? பழம்பெரும் தயாரிப்பாளரா…? பழம்பெரும் வினியோகஸ்தரா..? இல்லை திரையரங்க உரிமையாளர்களா..? இதில் எவருமே இல்லை என்பது எவ்வளவு பெரிய கொடுமை…என்பது எத்தனை பேருக்கு தெரியும்..? அந்த அளவுக்கு சினிமா புதுப் புது தரகர்கள் கையில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது.; அதே போல் இன்று திரைப்படங்கள் தயாரிப்பதும் தயாரிப்பாளர் கவுன்சிலோ..சேம்பரோ…கில்டிலோ இருக்கும் பழைய மெம்பர்கள் இல்லை என்பதும் எத்தனை பேருக்கு தெரியும்.


99% புத்தம் புது தயாரிப்பாளர்கள் தான் இன்றைய தமிழ் சினிமாக்களை தயாரித்து கொண்டு இருக்கிறார்கள்.

அவர்களும், எததெற்கோ ள?ன ஆசைப்பட்டு சினிமா படப்பிடிப்புக்கு என்னென்ன வேண்டும் என்ற BASIC KNOWLEDGE கூட இல்லாமல் படத்தை தயாரித்து விட்டு அதை விற்கக்கூட முடியாமல் இருக்கும் நிலைக்கு தள்ளப் படுகிறார்கள்.

என்னுடைய நண்பர் ஒருவர் இயக்குநராக திருச்சிக்கு சென்று ஒரு தயாரிப்பாளரை பார்த்து கதை பேசி படப்பிடிப்பு எல்லாம் முடிவு செய்து, இங்கு சிட்டிங் ஆரம்பித்த அன்று ..அந்த தயாரிப்பாளர்..படப்பிடிப்பு குழுவான 120 பேரை பார்த்தவுடன் டென்ஷனாகி,..’’ எதற்கு இத்தனை பேர்.. நீங்க கதை சொன்னப்ப ,..3,4 பேரு தானே வந்தீங்க..அதுக்கப்புறம் நடிக்கறவங்க மட்டும் தானே வரணும் என காமெடி பண்ணி அந்த படப்பிடிப்பை கேன்ஸல் செய்து விட்டார்.

சுமார் ஒரு கோடி பட்ஜெட்டில் எடுக்கும் படம்..ஒரு லட்சம் கூட வசூலை தரவில்லை என்றால்..அந்த தயாரிப்பாளரின் நிலை.?

இன்று சிறிய பட்ஜெட்டில் படம் தயாரிக்கும் யாருமே. ஒன்று. அவர்கள் சொந்த செலவில் ரிலீஸ் செய்ய வேண்டும். இது கிட்டத்தட்ட சொந்த காசில் தனக்கு தானே சூன்யம் வைத்து கொள்வதற்கு சமம்.

அல்லது ஒரு டேபிள் பத்துக்கு பத்து அறையில் இருக்கும் ரிலீஸ் செய்து தருகிறேன் என்ற பெயரில் இருக்கும் மீடியேட்டர்கள் (அ) ரிலீஸ்ஸிங் செய்து தரும் கம்பெனிகளை அணுக வேண்டியது தான்.

இன்று ஒவ்வொரு படத்துக்கும் முன் நான்கைந்து கம்பெனி பெயர்கள் வருவது இதன் அடிப்படையில் தான்..இவர்களுக்கு தெரிந்ததெல்லாம். தியேட்டர்கள் கமிட் செய்து தருவது மட்டுமே,,,.அதிலும் முதல் பேச்சு வார்த்தையின் போது 150-120 தியேட்டர்கள் புக் செய்து தருவதாக சொல்லப்பட்டு ,.ரிலீஸ்ஸுக்கு முதல் நாள் இரவு 30 தியேட்டர் கிடைத்தால் பெரிய விஷயம் என தயாரிப்பாளரிடம் சொல்லி அவர்களும் வேறு வழி இன்றி..முப்பது தியேட்டருக்கான வாடகை. மேனேஜர் கமிஷன்..ணமஇஊ வாடகை..என மீண்டும் சில பல லகரங்களை இழக்க வேண்டி வரும். இந்த முறையில் ரிலீஸ்ஸிங் செய்து தரும் கம்பெனிகள் தனக்கு சேர வேண்டிய கமிஷனை 10 % முதல் 20 % முதலிலேயே வாங்கி விடுவார்கள்.

அல்லது உதாரணத்துக்கு இரண்டு கோடியில் தயார் செய்த ஒரு படத்தை அடிமாட்டு ரேட்டுக்கு 25 லட்சம் 50 லட்சம் என பேரம் பேசி வாங்கி அதை அவர்கள் ரிலீஸ் செய்து லாபமோ நஷ்டமோ அவர்கள் பார்த்து கொள்ளும் முறையும் இருக்கிறது.

ஆனால் அவர்களை பொறுத்த வரை அந்த படத்தை இட்டு எந்த நஷ்டமும் இல்லை..படத்துக்கு முதலீடு செய்த கோடிக்கணக்கான முதலீடும் போய் ரிலீஸ்க்கு செய்த செலவும் போய் அடிபட்டு சிதறுவது அந்தந்த தயாரிப்பாளர்கள் மட்டுமே..!

இந்த விதிமுறைகளுக்கு கட்டுபடாமல் படத்தை எப்படியும் விற்று விடலாம் என இருக்கும் பல தயாரிப்பாளர்கள்…தெருவில் நின்று கொண்டிருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட ஆயிரத்துக்கு மேல் பட்ட படங்கள் என்ன கதிக்கு ஆளாக போகிறது என தெரியாமல் அரை படம் கால் படம் என படப்பிடிப்பு எடுக்கப்பட்டு கிடக்கிறது.

நானூறுக்கு மேல் படங்கள் சென்ஸார் செய்யப்பட்டு ரிலீசாகாமல் தூங்கி கொண்டிருக்கிறது…இதில் முதலீடு செய்த தயாரிப்பாளர்களை பற்றி யோசித்து பாருங்கள்..

சிறு முதலீட்டு தயாரிப்பாளர்களின் நிலை ஒருபுறம் இப்படி என்றால்..

பெறுமுதலீட்டு படங்களின் நிலையோ தலைகீழ்…. இதிலும் புகுந்திருப்பது பெரிய பெரிய அரசியல் புள்ளிகளும் ,..பெரிய பெரிய பிஸினஸ் புள்ளிகளும் தான் சேர்ந்து அதை சூதாட்டமாக மாற்றி குட்டிசுவாராக்கி இருக்கிறார்கள்.


ஒரு சூப்பர் ஹீரோ படத்தை…ஒரு புள்ளி ஒரு படத்தை நூறு கோடிக்கு விலை பேசினால் அடுத்த புள்ளி அதை 120 கோடிக்கு கேட்பார்,..இப்படி விலை ஏற்றி விலை ஏற்றி வாங்கி விட்டு அந்த விலைக்கு மேல் லாபம் வைத்து..அடுத்த புள்ளிக்கு கை மாற்றி கை மாற்றி..அது யானை விலைக்கு வாங்கி டைனோஷர் விலையில் போய் நிற்க்கும் ..அந்த படம் என்ன தான் சூப்பர்டூப்பர் ஹிட் படமாக இருந்தால் கூட..அவர்கள் கை கால்..தலை வரை கடிபட்டு நிற்பார்கள்..பின் அந்த நடிகர் தயாரிப்பாளரிடம் நஷ்ட ஈடு கேட்டு வீட்டு வாசலில் உண்ணாவிரதம் ,..போராட்டம் என சண்டை போட வேண்டியது தான்…!

எல்லா நடிகருக்கும் ஒரு குறைந்த பட்ச வியாபாரமும் ..அதிக பட்ச வியாபாரமும் இருக்கிறது..இது அந்த நடிகரின் முன் ரிலீஸான படத்தின் வெற்றி தோல்வியை பொறுத்து ,,.முன் பின் ஏறி ளஅன இறங்கி நிற்கும்..ஆனால் இன்று ரிலீஸ் செய்யும் நபர்கள் சினிமாவின் முன் அனுபவம் இல்லாததாலும்..முதல் மூன்று நாள் வியாபார வசூலை மனதில் வைத்துமே படத்தை விலை பேசுவதால் தான் இந்த சறுக்கலே..!

போதாக்குறைக்கு அவ்வப்போது ஆட்சி மாற்றத்துக்கு ஏற்ற அரசியல் பெரும் புள்ளிகள் தனது கருப்பு பணங்களை வெளியேற்றும் ஒரே இடம் சினிமா மட்டுமே..என்பது உண்மை ..இன்றைய ஆட்சியாளர்களின் பினாமி கூட தமிழகம் முழுதும் மிகப் பெரிய காம்ப்ளெக்ஸ் திரையரங்குகளை தன் சொத்துக்களாக்கி இருக்கிறதும் மட்டும் இல்லாமல் படங்களை வாங்கி வெளியிடும் உரிமையும் பெற்று இந்த தீபாவளி படங்களில் இருந்து ஆரம்பிக்க இருக்கிறது.

எப்போதுமே கார்ப்பரேட் நிறுவனங்களோ…அரசியல் பெரும் புள்ளிகளோ சினிமா வியாபாரதுக்கு வந்தால்.

நடிகர்கள் சம்பளம் முதல் டெக்னிஷியன் சம்பளம் ,.பட்ஜெட் என உயர்த்தி விட்டு,.சாதாரண தயாரிப்பாளர்களும் அந்த பட்ஜெட்டை செலவு செய்தாக வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.அதனால் இவர்களது வரவு தமிழ் சினிமாவுக்கு கேடே ஒழிய நல்லது இல்லை என்பது கடந்த பல வருடங்களாக கண்கூடாக பார்க்கும் உண்மை..!

தமிழ்ச் சினிமாவை கொஞ்சமாவது காப்பாற்ற சரி என்ன செய்யலாம்….?

1.பக்கத்து மாநிலங்கள் மாதிரி திருட்டு விசிடி வராமல் தடுக்க வேண்டும்.

யார் வீட்டு முதலீடோ என்பது போல் தமிழ் சினிமா வெளியான அன்றே திருட்டு விசிடி வருவதை பார்த்து கொண்டிருக்கும் சம்பத்தபட்ட தயாரிப்பாளர்கள் ஸ்டெப் எடுக்க வேண்டும்.

2.டிக்கெட் விலையும் பார்க்கிங் கட்டணமும் குறைக்க வேண்டும்,,குறைக்காத வரை 30 ரூபாய் சிடி போதும் என தான் இருப்பார்கள்.

3.நடிகர்கள் சம்பளம்,…ஆறு கோடி பிஸினஸ் ஆகும் ஒரு நடிகர் தன் சம்ப:ளத்தை நாலு கோடி கேட்டால் ,..சூட்டிங்க் எந்த பணத்தை வைத்து எடுப்பது,,.தெலுங்கு பட உலகம் மாதிரி பிஸினஸ்ஸில் பங்கு ளஅன குறைந்த முன்பணம் வாங்கி கொண்டு நடிப்பது என ஒத்துழைத்தால் படத்தின் மினிமம் கியாரண்டிக்கு உத்திரவாதமாகலாம்.

4.தயாரிப்பாளர்கள்,..ஒரு நடிகருக்கு என்ன வியாபாரம் இருக்கிறதோ அதற்கேற்றார் போல் செலவு செய்ய செய்ய வேண்டும் ஏழு கோடி தான் வியாபாரம் இருக்கும் ஒரு ஹீரோவின் படத்துக்கு 19 கோடி செலவு செய்தால் ..படம் ரிலீஸ்க்கு முன்னரே அது தோல்வி படம் என்பது புரியவில்லையா,..அதனால் அந்த்த நடிகரின் வியாபாரத்துக்கு ஏற்ற வகையில் பட்ஜெட் போட்டு படமெடுக்கலாம்.

5.விநியோகஸ்தர்களும் ,..வாங்கும் படத்தின் நடிகரின் வியாபார விஷயம் தெரிந்து விலை கொடுத்து வாங்குங்கள்.

6.சிறு படத் தயாரிப்பாளர்களாக வருபவர்கள் தகுந்த அனுபவசாலிகளை எல்லா டிபார்மெண்ட்களிலும் வைத்து கொள்ளலாம்,

சங்கு ஊதறது ஊதியாச்சு….ஊதினது நல்ல காதா கெட்ட காதான்னு பார்க்கலாம்…..! nakkheeran.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக