வெள்ளி, 27 நவம்பர், 2015

பிகாரில் ஏப்ரல் முதல் பூரண மதுவிலக்கு அமுல்படுத்தப்படும்..நிதிஷ்குமார் அறிவிப்பு

பாட்னா :'பீஹாரில் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப் படும்' என அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.பீஹார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் - ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசு நவ., 20ல் பதவியேற்றது. முன்னதாக சட்டசபை தேர்தலை ஒட்டி நடைபெற்ற பிரசாரத்தின் போது ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு வந்தால் 'மாநிலத்தில் முழு மதுவிலக்கு அமல்படுத்தப்படும்' என நிதிஷ் குமார் அறிவித்தார்.இந்நிலையில் கலால் வரி தினத்தை முன்னிட்டு பாட்னாவில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது 'மீண்டும் ஆட்சி அமைத்தால் மாநிலத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்படும்' என உறுதி அளித்தேன். அந்த வாக்குறுதியை நிறைவேற்ற அரசு கடமைப்பட்டுள்ளது. மது விற்பனை மூலம் அரசுக்கு வருமானமாக பல கோடி ரூபாய் கிடைக்கிறது. சிறப்பான முடிவு நிதிஷுக்கு வாழ்த்துக்கள் ஆனாலுங்க வேற தேதியா கிடைக்கல


மதுவிலக்கை அமல்படுத்துவதால் இந்த வருமானத்தை அரசு இழக்க நேரிடும்.ஆனாலும் மக்களின் நலன் தான் முக்கியம் என்பதால் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் பீஹாரில் மதுவிலக்கு அமல்படுத்தப்படும். மது குடிப்பதால் ஏழைகளும் பெண்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். ஒரு ஆணுக்கு உள்ள குடிப்பழக்கத்தால் அந்த குடும்பமே நாசமடைவதை நாம் பார்த்துள்ளோம். மது விற்பனைக்கு தடை விதிப்பதன் மூலம் அந்த குடும்பங்களில் திரும்பவும் மகிழ்ச்சியை காண முடியும் என நம்புகிறேன்.

மது பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் பற்றி மக்களுக்கு தொண்டு நிறுவனங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இந்த விஷயத்தில் சிறப்பாகச் செயல்படும் தொண்டு நிறுவனத்துக்கு விருது வழங்கப்படும்.

* நம் நாட்டில் குஜராத், நாகாலாந்து, யூனியன் பிரதேசமான லட்சத்தீவுகளில் முழு மதுவிலக்கு அமலில் உள்ளது
* மணிப்பூர் மாநிலத்தில் சில பகுதிகளில் மட்டும் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது
* அண்டை மாநிலமான கேரளாவில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு ஓட்டல்களில் திறக்கப்பட்டிருந்த மதுபான பார்கள் முதல்கட்டமாக மூடப்பட்டுள்ளன
* ஆந்திரா, ஹரியானா, மிசோரம் மற்றும் தமிழகத்தில் முன்னர் மதுவிலக்கு அமலில் இருந்தாலும் பின்னர் அது விலக்கிக்்கொள்ளப்பட்டது. தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக