வெள்ளி, 27 நவம்பர், 2015

சோனியா மன்மோகன் சிங்கிற்கு மோடி பாதபூஜை...பாராளுமன்றத்தில் காங்கிரஸ் அமைதியா இருக்கணுமே?

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து
பேச்சுவார்த்தை நடத்த அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருந்தார். இதற்காக அவர் டெல்லியில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் தேநீர் விருந்து ஒன்றுக்கும் ஏற்பாடு செய்திருந்தார். இதன்படி வெள்ளிக்கிழமை மாலை இந்த விருந்தில் சோனியா காந்தியும், மன்மோகன் சிங்கும் கலந்து கொண்டனர். இவர்கள் இருவரையும் நரேந்திர மோடி வாயிலில் வந்து வரவேற்றார். மத்திய அமைச்சர்கள் வெங்கையா நாயுடு, அருண் ஜெட்லி ஆகியோரும் உடனிருந்தனர்.முன்செஞ்ச வினை சும்மா விடுமா? முன்பு சொன்னெதெல்லாம் பொய் செய்ததெல்லாம் கூச்சல் கொலைவெறி..இப்ப குத்து குடையுதுன்னா...  
இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அருண் ஜெட்லி, சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு மசோதாவில் 3 முக்கிய திருத்தங்கள் குறித்து காங்கிரஸ் தலைவர்கள் கூறியுள்ளனர். இந்த மசோதா குறித்து பிரதமரின் கருத்துக்களை தங்களது கட்சியின் முக்கிய நிர்வாகிகளோடு கலந்து ஆலோசிக்க காங்கிரஸ் தலைவர்கள் உள்ளனர். மேலும் ஒருமுறை இதேபோன்று காங்கிரஸ் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக