ஞாயிறு, 8 நவம்பர், 2015

லாலு- நிதீஷ்- சோனியா கூட்டணி வெற்றிக்கு கலைஞர்- முலாயம் வாழ்த்து...

பீகாரில் சமுக நீதியை திறம்பட அமுல் படுத்தியதற்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம் இது என்று கலைஞர் தனது வாழ்த்தில் கூறியுள்ளார்
பீகார் சட்டசபை தேர்தலில் மகா கூட்டணி கட்சி வெற்றி பெற்றதை அடுத்து பீகார் முதல் மந்திரி நிதீஷ் குமார் மற்றும் ராஷ்டீரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஆகியோருக்கு சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார். . சமாஜ்வாடி கட்சியின் மாநில தலைவர் மற்றும் உத்தர பிரதேச முதல் மந்திரியான அகிலேஷ் யாதவ் மற்றும் கட்சியின் மூத்த தலைவர் ஷிவ்பால் ஆகியோரும் பீகார் தேர்தலில் பலத்த வெற்றி பெற்றதை அடுத்து அக்கூட்டணி தலைவர்களுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டுள்ளனர்.சமுக நீதி  கொள்கைகள்  சாதாரண மக்கள் மத்தியில் வேரூன்றி விட்டது
அகிலேஷ் தனது டுவிட்டர் செய்தியில், வரலாற்று வெற்றி பெற்றுள்ள நிதீஷ்ஜி மற்றும் லாலுஜி ஆகியோருக்கு வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.
சமாஜ்வாடி கட்சி மகா கூட்டணியில் ஆரம்பத்தில் இடம் பெற்றது.  அதன்பின்பு கூட்டணியில் இருந்து வெளியேறி பீகார் தேர்தலில் தனித்து போட்டியிட்டது.அந்த கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. dailythanthi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக