வியாழன், 27 ஆகஸ்ட், 2015

அடுத்த இலக்கு நான்தான்! star டிவி யின் நிறுவனர் மகன், மகளை கொன்று காட்டில் வீசிய இந்திராணி தன்னையும் கொலை...


ஸ்டார் இந்தியா’ தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி பீட்டர் முகர்ஜி. இவருடைய மனைவி இந்திராணி (வயது 43). இவர் ‘9 எக்ஸ் மீடியா’ என்ற தனியார் தொலைக்காட்சியின் நிறுவனர். இந்திராணி 2012-ம் ஆண்டு அவருடைய தங்கை ஷீனா போராவை கொலை செய்து மும்பையை அடுத்த ராய்காட் காட்டுப்பகுதியில் வீசியதாக தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இந்திராணியை போலீஸ் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், ஷீனா போராவை தானே கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். முதலில் கொலையான ஷீனா போரா தனது தங்கை என்று கூறிய இந்திராணி, போலீசாரின் தீவிர விசாரணையில் தான் பெற்றெடுத்த மகள் என்ற அடுத்த குண்டை தூக்கி போட்டார்.


பீட்டர் முகர்ஜிக்கும், இந்திராணிக்கும் 2002-ம் ஆண்டு காதல் திருமணம் நடந்தது. பீட்டர் முகர்ஜி ஏற்கனவே திருமணம் ஆனவர். அவருக்கு முதல் மனைவி மூலம் ராகுல் என்ற மகன் உள்ளார். இதேபோல இந்திராணியும் ஏற்கனவே திருமணமானவர். அவருக்கு ஷீனா போரா (கொலையானவர்) என்ற மகளும், மிக்கேல் போரா என்ற மகனும் உள்ளனர். ஆனால் இந்திராணி தனக்கு ஏற்கனவே ஆன திருமணத்தையும், அதன் மூலம் பிறந்த குழந்தைகள் பற்றிய தகவல்களையும் பீட்டர் முகர்ஜியிடம் மறைத்து விட்டார். மகள் ஷீனா போராவை தங்கை என்றும், மகன் மிக்கேல் போராவை தம்பி என்றும் கூறியுள்ளார். இதனிடையே 2007-ம் ஆண்டு கணவன்-மனைவி இருவரும் ‘9 எக்ஸ் மீடியா‘ என்ற தனியார் தொலைக்காட்சியை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் ராகுலுக்கும், ஷீனா போராவுக்கும் காதல் மலர்ந்தது. இந்த முறையற்ற காதலை இந்திராணி எதிர்த்தார். ஆனால் மகள் கேட்கவில்லை. இதனால் இந்திராணி பெற்ற மகள் என்றும் கூட பாராமல் ஷீனா போராவை கழுத்தை நெரித்து கொலை செய்து பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். பின்னர் டிரைவர் ஷாம் மனோகர் ராய் உதவியுடன் மகளின் எரிந்த உடலை ராய்காட் காட்டுப்பகுதியில் வீசினார்.

இந்த பரப்பரப்பான சூழ்நிலையில், கவுகாத்தியில் தன் தாத்தா பாட்டியுடன் வசிக்கும் இந்திராணி மகன் மிக்கேல் போரா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது “அவர்களின் அடுத்த இலக்கு நானாக (பீட்டர் முகர்ஜிக்கும், இந்திராணி) இருக்காலாம். அவர்கள் மிகவும் செல்வாக்கான நபர்கள். எனவே, போலீஸ் என்னை மும்பைக்கு அழைத்தால், என் நண்பர்களின் பாதுகாப்புடன் செல்ல முடிவு செய்துள்ளேன்.

போலீஸ் இதுவரை என்னை தொடர்புக்கொள்ளவில்லை. அவர்கள் கேட்கும் போது எனக்கு தெரிந்த அனைத்து உண்மைகளையும் சொல்வேன். என் அக்காவிற்கு நியாம் கிடைக்கவேண்டும். ஆனால் என் அம்மா அனைத்து உண்மைகளையும் போலீசிடம் சொல்லிவிடுவார் என்று எதிர்பார்க்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளா மாலைமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக