வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

அரபு நாட்டு அவலம்! 56 இலங்கை பெண்கள் தூதரகத்தில் தஞ்சம்....நாடு திரும்பினர்

வெளிநாட்டில் வேலை வாய்ப்புக்குச் சென்று அங்கு பல துன்பங்களை அனுபவித்து வந்த பெண்கள் சிலர் இன்று நாடு திரும்பினர்.இலங்கை விமான சேவைக்குச் சொந்தமான யு.எல்.230 என்ற விமானத்தில் இன்று காலை 06.10 அளவில் 56 பெண்கள் நாடு திரும்பினர். இப்பெண்கள் சவுதி அரேபியா மற்றும் குவைட் ஆகிய நாடுகளுக்குச் சென்றதுடன் அங்கு பல துன்பங்களுக்கு முகங்கொடுத்து வந்துள்ளனர். இதனை அடுத்து அந்நாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களில் தஞ்சம் புகுந்து இருந்த நிலையில் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக