வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

அழகிரியை மீண்டும் கழகத்தில் சேர்க்க வேண்டும்: ஆதரவாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்!

தேனி மாவட்டத்தில் கடமலைக்குண்டு மயிலாடும்பாறை ஒன்றியத்தில் உள்ள திமுக இளைஞரணி மற்றும் வார்டு செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் கடமலைக்குண்டு ஏ.எம்.ஏ., பண்ணையில் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு முன்னாள் ஒன்றிய செயலாளர் இளம்வழுதி பாண்டியன் தலைமை தாங்கினார். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் குணசேகரன், முத்தாலாளம்பாறை ஊராட்சி மன்றத் தலைவர் பிச்சமணி, மகாராஜன், தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் 300க்கும் மேற்பட்ட திமுக கிளைச் செயலாளர்கள், பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கூட்டத்திதில், மு.க.அழகிரியை மீண்டும் திமுகவில் இணைத்துக் கொள்ள வேண்டும். தென் மண்டல அமைப்புச் செயலாளராக அவரை கழகத் தலைமை நியமிக்க வேண்டும். தென் மண்டலங்களில் உள்ள தொகுதிகளில் திமுக வெற்றிப் பெற வேண்டும் என்றால் மு.க.அழகிரியை மீண்டும் கட்சியில் இணைப்பது அவசியம். கழகம் எப்படி போனால் என்ன அறக்கட்டளைதாய்ன் முக்கியம்? சோவியத் ஸ்டாலின் எப்படி எல்லாரையும் ஓரங்கட்டி தனது சர்வாதிகாரத்தை நிலைநாட்டி ஜனநாயகத்தை அழித்து கம்யுனிசத்தை ஒருவழியாக்கி...,அதே வழியில்  திமுகவை எதிர்கட்சி அந்தஸ்து கூட இல்லாத நிலைக்கு .... 
இங்குள்ள மாவட்டச் செயலாளர் மூக்கையா கட்சிக்காரர்களை மதிக்காமல் தனிச்சையாக செயல்படுகிறார். ஆகையால் அவரை மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து எடுத்துவிட்டு, புதிய பொறுப்பாளரை கழகத் தலைவர் அறிவிக்கவேண்டும். அப்படி அறிவிக்க தவறினால், மு.க.அழகிரி என்ன சொல்கிறாரே அதன் வழியில் செல்வோம். கடமலைக்குண்டு மயிலாடும்பாறை ஒன்றியத்தில் உள்ள 163 வார்டுகளில் 159 வார்டில் கழக தேர்தலின்போது நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதுவும் முறைகேடாக தேர்தல் நடந்துள்ளது. அதனால் அதனை கலைத்துவிட்டு முறையாக தேர்தல் நடத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தக் கூட்டம் நடைபெறும் பகுதியில் சுமார் 25க்கும் மேற்பட்ட பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் கட்சியின் அறிவுறுத்தலையும் மீறி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரி மற்றும் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அவரது ஆதரவாளர்கள் படங்கள் இருந்தன. ஒரு சில பேனர்களில் மட்டுமே ஸ்டாலின், கலைஞர் படங்கள் இருந்தன. மாவட்டச் செயலாளர் மூக்கையா, ஒன்றியச் செயலாளர் சுப்பிரமணி ஆகியோரின் படங்களும் இடம்பெறவில்லை. செய்தி, படங்கள்: சத்தி nakkheeran,in 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக