சனி, 25 ஜூலை, 2015

வழக்கில் இருந்து விடுவிப்பு! IPL மேட்ச் பிக்சிங் குற்றவாளிகள் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், அஜய் சண்டிலா விடுதலை!

2013-ம் ஆண்டு நடந்த ஐ.பி.எல். மேட்ச் பிக்சிங் முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், அஜய் சண்டிலா ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என கூறிய டெல்லி பாட்டியாலா நீதிமன்றம், அவர்களை இன்று விடுவித்தது. தீர்ப்பைக் கேட்ட மூன்று வீரர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் கோர்ட்டுக்கு வெளியில் ஸ்ரீசாந்த் நிருபர்களிடம் கூறுகையில், “நாங்கள் தொடர்ந்து விளையாட பி.சி.சி.ஐ. எங்களை அனுமதிக்கும் என்று நம்புகிறேன். அனுமதி கிடைத்தால் உடனே பயிற்சியை ஆரம்பித்து உடற்தகுதி பெறுவேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. எங்களுக்காக பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கும் நண்பர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இனி எந்த குற்றத்திற்கும் பணக்காரங்க ஆட்டோமட்டிக்காகவே விடுவிக்கப்படுவாங்கன்னு பேசாம சட்டம் போட்டுங்க ! மக்கள் வரிப்பணம் மிச்சம் பாருங்க?  


நான் கிரிக்கெட் விளையாடப் பிறந்தவன். முதலில் நான் ஒரு கிரிக்கெட் வீரர். அனைத்து விதங்களிலும் பிசிசிஐ எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தது. கடந்த காலத்தை மறந்து மீண்டும் கிரிக்கெட் விளையாட விரும்புகிறேன்” என்றார்.

இதேபோல், அங்கீத் சவான், சண்டிலா ஆகியோரும் இதே கருத்தை உணர்ச்சிப்பெருக்குடன் தெரிவித்தனர் மாலைமலர்.com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக