சனி, 25 ஜூலை, 2015

வெங்கைய்யா நாயுடு:மோடி பிரபலமாகி வருவதை காங்கிரசால் தாங்க முடியல்ல !

பிரதமர் நரேந்திர மோடி பிரபலமாகி வருவதை காங்கிரஸ் கட்சியால் தாங்கிக்கொள்ள முடியாததால் பாராளுமன்றத்தை தொடர்ந்து முடக்கி வருவதாக மத்திய மந்திரி வெங்கையா நாயுடு குற்றஞ்சாட்டியுள்ளார். இதுபற்றி அவர் கூறியவை பின்வருமாறு:- பிரதமரை பற்றியும், மற்ற மந்திரிகளை பற்றியும் அவதூறான கருத்துக்களை பரப்பி வருவதை ஒரு பேஷனாகவே காங்கிரஸ் இப்போது கையாண்டு வருகிறது. சர்வதேச அளவிலும், இந்திய அளவிலும் பிரதமர் நரேந்திர மோடியின் புகழ் பரவி வருவதை காங்கிரஸ் கட்சியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. பிரதமர் மோடியின் புகழையும், அவரது தலைமையிலான மத்திய அரசின் மதிப்பையும் சிதைப்பதிலேயே காங்கிரஸ் குறியாக இருக்கிறது. மோடியும் அவரது ஒரு கோடிரூபாய்  கோர்ட்டும் அவர் ஒரு  பவர்ஸ்டார்தான் என்பதை காட்டுகிறது .ஆனா வீணாய்ப்போன காங்கிரஸ்காரங்க  புரிஞ்சுக்க மாட்டாய்ங்க! வரலாறு முக்கியம் அமைச்சரே  
மோடி அரசு சாதனைகளை செய்வதில் அவர்களுக்கு விருப்பம் இல்லை. தற்போதைய மத்திய அரசு சுத்தமான அரசாகும். ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் இதுவரை எந்த ஊழலிலும் மத்திய அரசு ஈடுபடவில்லை. காங்கிரஸ் கட்சியானது பாராளுமன்றத்தை நடக்க விடாமல் முடக்குவதை நான் ஒரு பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி என்கிற முறையில் நிச்சயமாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

இவ்வாறு வெங்கையாநாயுடு தெரிவித்தார். dailythanthi.in 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக