புதன், 8 ஜூலை, 2015

எம்எஸ் விஸ்வநாதன் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்!

மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதனின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. 87 வயதாகும் எம் எஸ் விஸ்வநாதனுக்கு சில தினங்களுக்கு முன் உடல் நிலை மோசமடைந்தது. அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார்.  சில தினங்கள் சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு அவர் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்பட்டது. சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். ஆனால் தொடர்ந்த சீரற்ற முறையில் அவர் உடல்நிலை காணப்பட்டதால், மீண்டும் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவரது மகன்கள் உடனிருந்து கவனித்து வருகின்றனர்.
Read more at: /tamil.filmibeat.com/ne

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக