செவ்வாய், 7 ஜூலை, 2015

விசாகா சிங் : Facebookஇல் சொந்த முகத்தை காட்டக் கூட தைரியம் இல்லை உங்களுக்கு!

திரைநட்சத்திரங்களுக்கும் ரசிகர்களுக்குமிடையேயான தூரம் என்பது மிக நீ......ண்டதாக இருந்தது. ஆனால் இப்போதோ சமூக வலைதளங்களின் மூலமாக ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நடிகர் நடிகையுடன் மிக நெருக்கமாகிவிட்டனர். இதனால் நடிகர்/நடிகைகளுக்கு பல லாபம் இருந்தாலும் சில சமயங்களில் பிரச்சனைகளும் ஏற்பட்டுவிடுகின்றன. கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் திரையுலகில் அறியப்பட்ட நடிகை விகாஷா சிங் தனது படம் ஒன்றை ஃபேஸ்புக்கில் பதிவேற்றியிருந்தார். அந்த படத்தில் ஒருவர் ஆபாசமாக கமெண்ட் செய்துவிட்டார். இந்த கீழ்த்தரமான செயலால் மனம் நொந்து அமைதியாக போய்விடாமல் அவரை காய்ச்சி எடுத்துவிட்டார் விஷாகா. ’சொந்த முகத்தை காட்டக் கூட தைரியம் இல்லை உங்களுக்கு. என்னைப் பற்றி பேசியது போல் உங்கள் வீட்டிலிருக்கும் பெண்களிடமும் பேசுவீர்களா?’ என விஷாகா கேட்டிருக்கிறார்.
விஷாகாவின் துணிச்சலுக்கு அவரது ரசிகர்களே பெரும் ஆதரவை தர, பல வருடங்களாக சமூக வலைதளங்களில் இயங்கிவரும் த்ரிஷாவும் தனது ஆதரவை தெரிவித்திருக்கிறார்.’ ’இவர்களை மாதிரியான கோழைகளுக்கு இப்படித்தான் பதிலடி கொடுக்கவேண்டும்” என்று ஆதரவுக்குரல் கொடுத்திருக்கிறார். இப்போது ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக