ஞாயிறு, 5 ஜூலை, 2015

Chotta shakeel: தாவூத் இந்தியா வர விரும்பியது உண்மை தான்! அத்வானியும் சரத்பவாரும் தடுத்துவிட்டனர்!

புதுடில்லி: 'டைம்ஸ் ஆப் இந்தியா' ஆங்கில நாளிதழுக்கு, மும்பை நிழலுலக தாதாக்களில் ஒருவனான சோட்டா ஷகீல், அளித்த பேட்டியில், 'மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக இந்திய அரசால் தேடப்படும் தாவூத் இப்ராகிம், இந்தியா வர விரும்பியது உண்மை தான். ஆனால், அப்போதைய மகாராஷ்டிர முதல்வர் சரத் பவார் அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. இந்த தகவலை, என் தலைவனான தாவூத் இப்ராகிம், பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானியிடமும் தெரிவித்துள்ளார்' என, கூறியிருந்தான். இதையடுத்து, இந்த விவகாரம் பரபரப்படைந்தது. மும்பையில், 1993ல், பயங்கர தொடர் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியதும், குடும்பத்துடன் பாகிஸ்தான் தப்பிச் சென்ற தாவூத் இப்ராகிம், இப்போது, பாகிஸ்தானின் கராச்சி நகரில் தான் உள்ளார் என, இந்திய உளவு அமைப்பு கள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றன. எனினும், அதை, பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வருகிறது. தாவுத்  அப்படியே குமாரசாமிக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து கேசுகளை ஒருவழிப்பன்னி  தேர்தலில் நின்று மத்திய அமைச்சராகவும் ஆகிட அரியவாய்ப்பு இன்னும் உள்ளது .
கராச்சி நகரில் இருக்கும், தாவூத்தின் கூட்டாளி சோட்டா ஷகீலிடம், ஆங்கில நாளிதழ் பேட்டி வாங்கியுள்ளதை அடுத்து, தாவூத் இப்ராகிமும், பாகிஸ்தானில் தான் இருக்கிறான் என்பது உறுதியாகியுள்ளது.

வழக்கறிஞர் ராம் ஜெத்மலானியிடம் இது குறித்து கேட்ட போது, அவர் கூறியதாவது: தாவூத் இப்ராகிமின் கூட்டாளி, சோட்டா ஷகீலை, நான் சந்தித்த பிறகு, லண்டனில், தாவூத் இப்ராகிமையும் சந்தித்தேன். அப்போது என்னிடம், இந்தியா வந்து, வழக்குகளை சந்திக்கத் தயார் என, தாவூத் இப்ராகிம் கூறினான். எனினும், அப்போதைய மகாராஷ்டிர முதல்வர், சரத் பவார் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. எழுத்துபூர்வமாக நான் இதற்கான அனுமதியை, சரத் பவாரிடம் கேட்டும், அவர் அனுமதிக்கவில்லை. மேலும், இந்தியா வந்தால், தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக தாவூத் நம்பினான். மும்பை குண்டுவெடிப்புகளுக்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என, அவன் கூறினான். இவ்வாறு, ராம் ஜெத்மலானி கூறினார்.

ராம் ஜெத்மலானி சொல்வது உண்மை தான். தாவூத் இப்ராகிம் மும்பை வர விரும்புகிறான் என அவர் கூறினார். ஆனால், அவன் விதித்த நிபந்தனைகள் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை. சிறையில் அடைக்கக் கூடாது; மும்பையில் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்பன போன்ற பல நிபந்தனைகளை அவன் விதித்திருந்தான். அவை ஏற்றுக் கொள்ள முடியாதவை என்பதால், அந்தத் திட்டம் நிறைவேறவில்லை.
சரத் பவார்,
தேசியவாத காங்கிரஸ் தலைவர்,
மகா., முன்னாள் முதல்வர்



சோட்டா ஷகீல் பேட்டி:

பாகிஸ்தானில் பதுங்கி வாழும், தாதா சோட்டா ஷகீல், டைம்ஸ் ஆப் இந்தியா நிருபருக்கு, தொலைபேசி மூலம் அளித்த பேட்டி:
மும்பை தொடர் குண்டு வெடிப்புக்கு பிறகு, 1993ல், நாங்கள் இந்தியா வர விரும்பினோம். உங்கள் அரசும், உங்கள் மக்களும் அதை அனுமதிக்கவில்லை. என் தலைவன், தாவூத் இப்ராகிம், அப்போது இதுகுறித்து, ராம் ஜெத்மலானியிடமும் பேசினார்.
இடையில் புகுந்து, அத்வானி குட்டையை குழப்பினார். அதனால், எங்கள் திட்டமே நிறைவேறவில்லை.இவ்வாறு, ஷகீல் கூறினான்.மேலும் அந்த பேட்டியில், தங்களின் விரோதி, மற்றொரு தாதாவான, சோட்டா ராஜனை எப்படியும் கொன்றே தீருவோம் என்றும் அவன் கூறினான்.
கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபடுகிறீர்களா என்ற கேள்விக்கு, 'ஆண்டவன் எங்களுக்கு போதுமான பணத்தைக் கொடுத்துள்ளான்; அது போன்ற செயல்களில் ஈடுபடத் தேவையில்லை' என்றான். தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக