புதன், 22 ஏப்ரல், 2015

நேர்மையான நீதிபதிகளுக்கு நியாயம் கிடைப்பதில்லை: கர்நாடக ஐகோர்ட் தலைமை நீதிபதி வகேலா பேச்சு

நாட்டில் நேர்மையாக பணியாற்றும் நீதிபதிகளுக்கு சரியான நியாயம் கிடைக்காமல் வஞ்சிக்கப்படுவதாக கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி  டி.எச்.வகேலா கூறினார்.கர்நாடக உயரநீதிமன்றத்தில் 15 ஆண்டுகள் நீதிபதியாக பணியாற்றி 68 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகளை விசாரணை நடத்தி தீர்ப்பு  வழங்கிய கே.எல்.மஞ்சுநாத் நேற்று பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அவருக்கு நடந்த வழியனுப்பு விழாவில் கலந்துகொண்டு தலைமை நீதிபதி வகேலா  பேசியது:நீதித் துறையில் கடமை தவறாமல் நேர்மையாக பணியாற்றியவர் மஞ்சுநாத், காலத்தின் கோலத்தாலும், சதியாலும் தலைமை நீதிபதியாகும் வாய்ப்பை  இழந்துவிட்டார். நான் பார்த்தவரை அவரிடம் சாதி பற்று இருந்தது கிடையாது. ஆனால் அவரை குறிப்பிட்ட சாதி வட்டத்திற்குள் அடைத்து விட்டனர்.  சாமானியமாக வாழ்ந்த அவர் நீதிபதிகளுக்கு வழங்கும் பாதுகாப்பை கூட ஏற்கவில்லை. கன்மேன் வைத்து கொள்ளும் வாய்ப்பு இருந்தும் பயன்படுத்தவில்லை.தனது பதவி காலத்தில் ‘பந்தா’ காட்டி கொள்ளாமல், எளிமையாக இருந்தார். நீதிபதிகள் சிலர் / பலர் ஜெயாவுக்கும் அமித்சாவுக்கும் சலாம் போட்டு......தத்துவும் சதாசிவமும் கவர்னர் ஜனாதிபதி பதவிகளையும் அடைந்து.....ம்ம்ம்
அவர் மீது வீண்பழி சுமத்தி பதவி உயர்வு கிடைக்காமல் செய்துவிட்டனர். நீதிபதி மஞ்சுநாத் போன்ற பல நேர்மையான நீதிபதிகளுக்கு இதுதான் பரிசாக  கிடைக்கிறது. இப்படி இருந்தால் யார் தான் நீதிபதியாக பணியாற்ற விரும்புவார்கள்? ஆட்சியாளர்கள், அதிகார வர்க்கத்தினருக்கு பணிந்து கொடுப்பது நீதிக்கு  ஏற்புடையதல்ல. நம் முன்வரும் வழக்கின் உண்மையான தன்மையை உணர்ந்து தீர்ப்பு வழங்குவது தான் நீதிபதியின் கடமையாகும். அப்படி செய்பவர்கள் யாரும்  நிலைப்பதில்லை என்பது நமது ஜனநாயகத்தின் மிக பெரிய சாபமாக உள்ளது. நேர்மைக்கு பரிசு வஞ்சை மட்டுமே. எது நடந்தாலும், நாம் நீதிக்கு மட்டுமே  பணிந்து செயல்பட வேண்டும். நெருக்கடிகளுக்கு பணியக்கூடாது.இவ்வாறு தலைமை நீதிபதி வகேலா பேசினார்.tamilmurasu.org/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக