புதன், 22 ஏப்ரல், 2015

குறும்பு நிகிதா பாடலுக்கு ஆடுகிறார் ! அதாய்ன் குத்தாட்டம்?

குறும்பு படம் மூலம் அறிமுகமான நிகிதா வெங்கட்பிரபு இயக்கிய சரோஜா படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம்போட்டார். தொடர்ந்து சத்ரபதி, வெற்றிவேல் சக்தி வேல், அலெக்ஸ் பாண்டியன் படங்களில் நடித்தார். அடுத்தடுத்து தமிழ் படங்கள் கிடைக்கவில்லை. இதையடுத்து எங்கிருந்து வந்தாரோ அந்த இடமான கன்னடத்துக்கு திரும்பி சென்றார். தற்போது மீண்டும் தமிழில் அவருக்கு ஒரு பாடலுக்கு ஆட அழைப்பு சென்றிருக்கிறது. சுசீந்திரன் இயக்க விஷால் காஜல் அகர்வால் நடிக்கும் படம் பாயும்புலி. இதில் குத்தாட்டம் ஆட முன்னணி நடிகையை தேடினார்கள்.
ஆனால் யாரும் முன்வரவில்லை. பிஸியாக இருப்பதாக நழுவிச்சென்றனர். இந்நிலையில் நிகிதாவிடம் கேட்டபோது ஓ.கே. சொன்னார். ஹீரோயினாக எட்டிப்பிடிக்கவிருந்த இடத்தை கைநழுவவிட்டதால் அதை மீண்டும் எட்டிப்பிடிக்க இதுவே சரியான தருணம் என பாடலுக்கு எந்நேரமும் கால்ஷீட் தர தயாராக இருப்பதாக சொல்லி இருக்கிறார் - See more at: tamilmurasu.org/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக