புதன், 22 ஏப்ரல், 2015

மதநம்பிக்கை, சமயச்சிந்தனைகள் எதிர்காலத்தை வளப்படுத்தாது IIT மாணவர்களின் கருத்து

இந்தியத் தொழில் நுட் பக்கழக மாணவர்களி டையே நாத்திகக் கருத்து வலுவாக பரவியுள்ளது. 2013-_14 ஆம் கல்வியாண் டில் பயிலும் மாணவர் களிடையே கடவுள் நம்பிக்கை மற்றும் மதம் குறித்த கருத்துக்கள் மீது நம்பிக்கையில்லை என்று கருத்துக் கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது. இந்திய தொழில் நுட்ப கழகங்களில் பயி லும் மாணவர்களிடையே அறிவியல் சார்ந்த கல்வி கற்கும் நிலையில் அவர் களின் கடவுள்/மத நம் பிக்கை குறித்த ஆய்வை மும்பையைச் சேர்ந்த ஒரு பத்திரிகை நிறுவனம் நடத்தியது. இந்த ஆய்வில் 22.8 விழுக்காடு தொழில் நுட்ப மேற்கல்வி பயி லும் மாணவர்கள் முழு மையான நாத்திக கருத்துள்ளவர்கள் என் றும், 30.1 விழுக்காடு கடவுள் நம்பிக்கை பற்றிக் கவலை இல் லாதவர்கள் என்றும் 47.1 விழுக்காடு மாண வர்கள் கடவுள் நம்பிக் கையுடையவர்கள் என்றும் அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இளங்கலை தொழில் நுட்ப மாணவர்கள் தங் களுக்கு இந்தியத் தொழில் நுட்பக்கழகத்தில் பயில கிடைத்த அரியவாய்ப்பு தங்களது கடுமையான உழைப்புத்தான், கல்வி கற்கும் போது அறிவியல் உபகரணங்கள் மற்றும் நாங்கள் கற்ற கல்வியின் திறனால் தான் இங்கு படிக்கும் வாய்ப்பு கிடைத் தது. மேலும் தொழில் நுட்பக் கல்வி என்பது அறிவியல் சார்ந்த ஒன்று இங்கு கடவுளுக்கு வேலை யில்லை என்று கூறினர்.
பல மாணவர்கள் தொழில் நுட்பம் பயிலுவதற்கும் கடவுள் நம்பிக்கைக்கும் எந்தத் தொடர்புமில்லை, என்று கூறினர். மதப் பாரம்பரிய குடும்பத்தில் இருந்து வந்த மாணவர் கள் கூட தொழில் நுட்பம் என்று வந்த உடன் தங்கள் கடவுள் நம்பிக் கையைக் கொஞ்சம் தள்ளி வைத்து விட்டுத் தான் இங்கு வருகிறார்கள். 2013-_14-ஆம் கல்வியாண்டில் பயிலும் 260 மும்பை தொழில் நுட்பகழக மாண வர்களில் பெருமாபாலா னோர் கல்வி என்று வரும் போது தங்களது கடவுள் நம்பிக்கையைக் கொஞ்சம் தளர்த்தி விடு கின்றனர். தேர்வு என்று வரும் போது 36 விழுக்காடு மாணவர்கள் தங்களின் திறமையை மட்டுமே நம்பியுள்ளனர்.    மாணவர்களின் நாத்திக மனநிலை குறித்து தொழில்நுட்பக் கழக பேராசிரியர் ஒருவர் கூறும் போது இங்கு கல்விபயில வரும் அனைத்து மாண வர்களுக்கும் அவர்களின் எதிர்காலம் குறித்து நிர்ணயித்துவிட்டுத் தான் வருகிறார்கள். தொழில் நுட்பக்கல்லூரி பட்டம் என்பது அவர்களின் வாழ்க்கையை மாற்றக் கூடியது. இங்கு பயிலும் கல்விக்கென்று நல்ல எதிர்காலம் உள்ளது.
ஆகையால் மாணவர்கள் தங்களின் மதநம்பிக்கை களை கொஞ்சம் மூட்டை கட்டி வைத்து விட்டுத் தான் வருகிறார்கள்.  முதலாம் ஆண்டு முதல் இறுதியாண்டு வரை தொடர்ச்சியான உழைப்பு,பாடங்களில் கவனம் செலுத்துதல், அறிவியல் கருத்துக்களை உள்வாங்குதல் போன்றவைகளால் தான் ஒரு தலைசிறந்த மாணவர் களாக அவர்கள் இங் கிருந்து வெளியேற முடி யும் என்பதும், தொழில் நுட்ப கழகங்களில் கூட மதநம்பிக்கை மற்றும் சமயசிந்தனைகளுடன் பயிலும் போது சரியான எல்லையை அடைய முடியாமால் போவதுடன் அவர்களால் சுதந்திர மான மனநிலையுடன் செயல் பட முடியாமல் போய் விடுகிறது என்று கணிப்பு வெளியாகியுள்ளது.

Read more: .viduthalai.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக