செவ்வாய், 28 ஏப்ரல், 2015

கூட்டணியின் வெற்றிதான் தமிழகத்தை காப்பாற்றும்! எந்த கூட்டணி ?

தேமுதிகவுடன் கூட்டணிக்கான அச்சாரம் போடப்பட்டுள்ளதா என்பது தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார். மேலும், கூட்டணியின் வெற்றிதான் தமிழகத்தைக் காப்பாற்றும் எனவும் அவர் கூறியுள்ளார். சென்னையில் திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி: கேள்வி: விஜயகாந்த் உங்களைச் சந்தித்ததை கூட்டணிக்கான அச்சாரம் என்று எடுத்துக் கொள்ளலாமா? பதில்: அது ஒவ்வொருவரும் தங்களுக்குள் எடுத்துக் கொள்வதைப் பொருத்த விஷயம். திமுகவைப் பொருத்தவரையில் இப்போதே முன் கூட்டியே எதுவும் சொல்வதற்கு இல்லை. ஆனால், இப்போது தமிழகம் உள்ள நிலையில் கூட்டணி தேவை என்பதையும், அந்தக் கூட்டணியின் வெற்றி ஒன்றுதான் தமிழகத்தைக் காப்பாற்றும் என்பதையும் நான் எடுத்துக் கூற விரும்புகிறேன். கேள்வி: விஜயகாந்த் எடுத்துள்ள முயற்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்? பதில்: தமிழக மக்களை ஒன்று திரட்டும் முயற்சியை விஜயகாந்த் எடுத்துக் கொண்டதற்காக அவரை நான் பாராட்டுகிறேன். அப்படிப் பாராட்டுவதற்கு அடையாளமாகத்தான் திமுக அவருடைய முயற்சிக்கு எல்லா வகையான ஆதரவையும் தரத் தயாராக உள்ளது என்று கருணாநிதி கூறியுள்ளார்dinamani.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக