வியாழன், 2 ஏப்ரல், 2015

23 ஆண்டுகளில் 45-வது முறையாக ஐ.ஏ.எஸ்.அதிகாரி கெம்கா இடமாற்றம்


சண்டிகர் : அரியானா மாநிலத்தில் நில மோசடி வழக்கை வெளிக்கொண்டு வந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான கெம்கா மீண்டும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அரியானா மாநிலத்தில் முந்தைய காங்கிரஸ்அரசி்ன் முதல்வராக இருந்த பூபேந்தர் சிங் ஹூடா காங் தலைவர் சோனியா மருமகன் வதேராவின் நில மோசடிக்கு ஆதரவாக இருந்ததாக ஐ.ஏ.எஸ் அதிகாரி கெம்கா குற்றம் சாட்டினார். இதனை அடுத்து அவர் பல்வேறு பணியிடங் களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு வந்தார். நேர்மையான ஐ.ஏ.எஸ் அதிகாரி என்ற புகழை பெற்ற இவரின் நடவடிக்கைகளுக்கு பா.ஜ., ஆதரவு தெரிவித்தது. பின்னர் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் காரணமாக பா.ஜ.,வை சேர்ந்த மனோகர் லால் கத்தார் முதல்வராக பதவியேற்றார். அப்போது கெம்கா போக்குவரத்து துறை ஆணையர் பதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.  நல்ல திறமையான அதிகாரிகள், அன்றிலிருந்து இன்று வரை இப்படித்தான் பந்தாடப்படுகிறார்கள்.
இருப்பினும் தன்னுடைய நிலைமையில் இருந்து மாறாத கெம்கா அளவுக்கு அதிகமான பாரங்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதித்துள்ளார். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட போக்கு வரத்து உரிமையாளர்கள் அனைவரும் கூட்டாக சேர்ந்து மாநில போக்குவரத்து துறை அமைச்சரான ராம் பிலாஸ்ஷர்மாவை சந்தித்து முறை யிட்டனர். தொடர்ந்து அளவுக்கு அதிகமான பாரங்களை ஏற்றிச் செல்வதற்கான விதிமுறை களையும் ஒராண்டு காலத்திற்கு ஒத்திவைத்தனர்.

மேலும் கெம்காவை வேறு துறைக்கு மாற்றவும் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து ஐ.ஏ.எஸ் அதிகாரி கெம்கா தற்போது தொல்லியல் துறை மற்றும் அருங்காட்சியகங்கள்துறை செயலாளராக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் தன்னுடை 23 ஆண்டு கால அரசுப் பணியில் 45 முறையாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.என்பது குறிப்பிடத்ததக்கது. கெம்காவை போலவே முதல்வரின் கூடுதல் தனி செயலாளராக இருந்து வந்த சுமிதா மிஸ்ராவும் இடமாற்றத்திற்கு உள்ளாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக