புதன், 1 ஏப்ரல், 2015

தந்தி டிவியின் பச்சை புழுகு! பெரியார் சொல்லாததை சொன்னதாக இட்டுக்கட்டிய ரங்கராஜன் பாண்டே!


வடநாட்டில் உள்ள ஒரு பிரபலமான பழமொழிதான் பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் முதலில் பார்ப்பனை அடி என்பதாகும். இதை ஒரு பார்ப்பான்  ஏதோ ஒரு அனாமதேய புத்தகத்தில் பதிப்பித்து விட்டான். அதை ஒரு ஆதாரமாக தந்தி டிவியின் பாண்டே காட்டுகிறார். மேலும் பல பார்ப்பனீய கருத்துக்கள் கொண்டவர்களால்   அறியாமையாலோ அல்லது  திட்டமிட்டோ  இது  தந்தை பெரியாரால் சொல்லப்பட்டது  என்று காலகாலமாக  திரும்ப திரும்ப சொல்லி  இந்த பழமொழிக்கு பெரியார் லேபில் ஒட்டி விட்டார்கள் அப்பொழுதுதான் அதற்கு ஒரு வெயிட் கிடைக்கும் , இந்த ரங்கராஜன் பாண்டே போன்ற பார்ப்பனீய பிரசாரகர்கள்  அய்யா வீரமணியை மீண்டும் உரசி பார்த்து சந்தடி சாக்கில்  தந்தை பெரியாருக்கு எதிராக நச்சு  பிரசாரத்தை அவிழ்த்து விடுகிறார். இதுதான்டா பார்ப்பனீயம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக