செவ்வாய், 31 மார்ச், 2015

ஜெயலலிதாவின் வழிகாட்டுதலில் பட்ஜெட்! ரகசிய காப்பில் மாட்டினார் பன்னீர்செல்வம் ! அம்மாவையும் மாட்டி விட்டார்! பாய்கிறது காண்டம் of கோர்ட்?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின் படி, தமிழக சட்டசபையில் பட்ஜெட்டை சமர்ப்பித்த, முதல்வர் பன்னீர்செல்வம் மீது, சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருகிறேன்,'' என, பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர், சுப்பிரமணியன் சாமி தெரிவித்தார்.பா.ஜ.,வின் பின்னணி அமைப்பாக இயங்கி வரும், விசுவ ஹிந்து அமைப்பைப் போல, விராத் ஹிந்து அமைப்பு என்ற புதிய அமைப்பை, தன் தலைமையில், நேற்று முன்தினம் சென்னையில் துவங்கி வைத்த சாமி, பின் அளித்த பேட்டி:இந்த அமைப்பு, விசுவ ஹிந்து அமைப்பு போலவே, பா.ஜ.,வுக்கு பக்கபலமாக இருந்து செயல்படும்;    ஓவரா கூவுனா அப்படிதான்.... அடிமையா இருக்கலாம் ஆனா அடி முட்டாளா இருக்க கூடாது... இல்லை இப்படி மாட்டிவிட்டு தான் நிரந்தர முதல்வரா இருக்கலாம்னு பிளானா? ஹையோ ஹையோ உன்னை புரிஞ்சுக்க முடியலயே ராசா ..குனிஞ்சு குனிஞ்சு காலை வாரி உட்டுட்டியே ....ம்ம் இதுவும் கூட கலைஞர் வாய்திறந்த பின்தான் சு.சாமிக்கு வெளங்கிச்சோ
இது என்னுடைய வெகு நாளைய கனவு; இப்போது நிறைவேறி இருக்கிறது; இந்த அமைப்பு, முதலில் தமிழகம் முழுவதும் கொண்டு செல்லப்படும்; பின், இந்தியா முழுவதும் கொண்டு செல்லப்படும். சொத்து குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறைக்கு சென்ற ஜெயலலிதா, உச்ச நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்து, வழக்கறிஞர் நாரிமன் மூலமாக வாதாடித்தான், ஜாமின் பெற்று வீட்டில் இருக்கிறார். ஜாமின் மனு தாக்கல் செய்து நாரிமன் வாதாடிய போது, உச்ச நீதிமன்ற நீதிபதிகளிடம் தன்னிச்சையாகவே, குறிப்பிட்ட சில நிபந்தனைகளுடன் ஜாமின் வழங்குமாறும், அந்த நிபந்தனைகளை ஜெயலலிதா பின்பற்றுவார் என்றும் சொல்லித்தான் ஜாமின் பெற்றார்.

வெளியே செல்ல மாட்டார் :

ஜாமின் கிடைத்தால், அவர் வீட்டை விட்டு வெளியே செல்ல மாட்டார் என்றும், தமிழக அரசு நடவடிக்கைகளில் தலையிட மாட்டார் என்றும் உறுதி தெரிவித்தார். ஆனால், தற்போது அதை அவர் மீறி விட்டதாக தெரிகிறது. சமீபத்தில் தமிழகத்தின் பட்ஜெட்டை, சட்டசபையில் தாக்கல் செய்த, தமிழக முதல்வர் பன்னீர்செல்வம், 'இந்த பட்ஜெட், ஜெயலலிதா வின் ஆலோசனையின் படி தயாரிக்கப்பட்டது' என, சட்டசபையிலேயே தெரிவித்து உள்ளார்.

மீறிவிட்டார்:

இந்த விஷயத்தில், ஜெயலலிதா, உச்ச நீதிமன்றத்துக்குக் கொடுத்த உறுதி மொழியை மீறிவிட்டார். அரசு நடவடிக்கைகளில் தலையிட்டதை, அவர் கட்சி சார்பில் முதல்வராக இருக்கும் பன்னீர்செல்வம், சட்டசபையிலேயே ஒப்புதல் வாக்குமூலமாக அளித்து விட்டார். இப்படி அவர் சொன்னதன் மூலம், அவரும் ரகசிய காப்பு பிரமாணத்தை மீறி விட்டார். பட்ஜெட் அறிக்கை தயார் செய்யும் போது, அரசுக்கு சம்பந்தம் இல்லாதவர்களுக்கு, அந்த அறிக்கையை காண்பிக்கக் கூடாது; இங்கே ஜெயலலிதா, அரசுக்கு சம்பந்தம் இல்லாதவர்; அவரின் ஆலோசனையை கேட்டுத்தான் பட்ஜெட்டை தயார் செய்தோம் என்றால், தார்மீக அடிப்படையில், அது குற்றம் தான்.இதுகுறித்து, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருகிறேன்.

முறைகேடுகள்:

தமிழகத்தை பொறுத்தவரையில், லஞ்சம், முறைகேடுகள் தலைவிரித்தாடுகிறது என்பது, அதிகாரிகள் தொடர்ச்சியாக தற்கொலை செய்வதிலிருந்து, அப்பட்டமாக தெரிய வருகிறது. நெல்லையில் வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமியிடம், ஆளுங்கட்சியினர் லஞ்சம் கேட்டு மிரட்ட, அவர் ரயில் முன் பாய்ந்து இறந்துள்ளார். அதேபோலவே, சுகாதாரத் துறை அதிகாரி, அறிவொளியும் கடலில் வீழ்ந்து இறந்துள்ளார்; இப்படி பல அதிகாரிகள் மன உளைச்சலில் உள்ளனர்.ஆனால், இந்த தற்கொலையை விசாரிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும், சி.பி.சி.ஐ.டி., போலீசார், உண்மையை மறைப்பதாக தெரிகிறது. அதனால், சி.பி.ஐ., விசாரணைக் கோரி வழக்கு போடுவது குறித்தும் யோசித்து வருகிறேன்.
இவ்வாறு, அவர் கூறினார்.
dinamalar.com
- நமது சிறப்பு நிருபர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக