திங்கள், 30 மார்ச், 2015

கைபேசி காதல் ! செல்போன்தான் இதில் ஹீரோவின் காதலி

திம்மம்பள்ளி சந்திரா இயக்கும் படம் ‘கைபேசி காதல்‘. இதன் ஆடியோ விழா சென்னையில் நடந்தது. இயக்குனர்கள் எஸ்.பி.முத்துராமன், வி.சி.குகநாதன், அபிராமி  ராமநாதன், ஜாக்குவார் தங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில் பேசிய ஹீரோயின் அர்பிதா, ‘படத்தில் நடிக்க என்னை இயக்குனர் அழைத்தார், சென்றேன்.  அதன்பிறகுதான் இதில் ஹீரோவின் காதலி நீ கிடையாது செல்போன்தான் என்றார். எனக்கு கொடுத்த வேடத்தை நடித்து முடித்திருக்கிறேன்‘ என்றார். இயக்குனர்  சந்திரா பேசும்போது,‘இப்போதுள்ள சூழலில் யாருமே யாரிடமும் பேச நேரமில்லாமல் இயந்திர கதியில் ஆழ்ந்துவிட்டனர். பணம், கார், செல்போன் இல்லாமல்  வாழ்வதில்லை. அப்படியொரு வாழ்க்கை வாழும் ஹீரோ ஒருவன் அவனது செல்போன் மீது கொண்ட காதலை வைத்துத்தான் இப்படம் உருவாகிறது. கிரண், அர்பிதா,  தர்ஷன், மாஸ்டர் விக்னேஷ், டாக்டர் சூரி, கிஷோர் நடிக்கின்றனர். விஜய் கிருஷ்ணா ஒளிப்பதிவு. த.சக்திவேல் தயாரிப்பு’ என்றார். - See more at: .tamilmurasu.org/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக