செவ்வாய், 31 மார்ச், 2015

ஜம்மு காஷ்மீர் :ஜீலம் நதி வெள்ள பேருக்கு 16 பேர் பலி

ஸ்ரீநகரில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் அடைமழை காரணமாக ஜீலம் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அங்கு பெய்த கனமழையால் இதுவரை 16 பேர் பலியான நிலையில், ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். ஜம்முவில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் ஒரு நபர் அடித்து செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து நீர்மட்டம் அதிகரித்து வரும் நிலையில், ஜீலம் நதிக்கரையில் வசிக்கும் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி, பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில் அடை மழையால் பாதிப்பு ஏற்பட்டது போல் தற்போதும் பாதிப்பு நிகழுமோ என மக்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது.


ஸ்ரீநகரில் உள்ள கோக்ஜிபாக் பகுதியில் 65 வயது நிசார் உசேன் ஆறு மாதங்களில் 2வது முறையாக தனது வீடு, வாசல்களை இழந்துள்ளார். வெள்ள அபாயம் குறித்து அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தவுடன் உடனடியாக தனது வீட்டை விட்டு வெளியேறிதாக கூறிய உசேன், ஜீலம் நதியில் வெள்ளம் புரள்கிறது என்பதை கேட்டவுடன், எனது மகள் கோக்ஜிபாக்கில் வசிக்க மறுத்துவிட்டதாக கூறினார்.

அங்குள்ள ராஜ்பாக் பகுதியில் அதிகாரிகளின் எச்சரிக்கைக்கு முன்னதாகவே பலரும் தங்கள் வீடுகளை காலி செய்துவிட்டதாக குலாம் ரசூல் என்ற 56வயது முதியவர் கூறினார். அனந்த்நாக்ககில் 22.8 அடி உயரத்திற்கு ஜீலம் நதியில் வெள்ளம் கரை புண்டு ஓடுகிறது. அதே போல் ஸ்ரீநகரில் உள்ள ராம் முன்ஷி பாக்கில் 19 அடி உயரத்திற்கும், பந்திப்போராவில் உள்ள அசிம்மில் 11.55 அடி உயரத்திற்கும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக