வெள்ளி, 13 மார்ச், 2015

இலங்கை சென்றடைந்தார் மோடி மொரீஷியஸ் நாட்டிற்கு அதிநவீன கப்பல்: இந்தியா பரிசு

ஐந்து நாட்களில் மூன்று நாடுகளுக்குச் செல்லும் சுற்றுப்பயணத்தில் மொரீஷியஸ் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு தலைநகரிலிருந்து இலங்கை புறப்பட்டார். அவர் இன்று அதிகாலை 5.25 மணிக்கு கொழும்பு சர்வதேச விமான நிலையம் சென்றடைந்தார். அவரை இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே நேரில் சென்று வரவேற்றார். இலங்கை சென்றுள்ள அவர் இலங்கை அதிபர் ஸ்ரீசேனாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். பின்னர், இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார கடந்த 28 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடிதான் என்பது குறிப்பிடத்தக்கது.

மொரீஷியஸ் நாட்டில் மோடி சுற்றுப் பயணத்தின் முக்கிய அம்சங்கள்:

* அந்நாட்டுக்கு இந்தியா, 3,000 கோடி ரூபாய் நீண்ட கால கடன் வழங்க சம்மதம்.


* ஐந்து ஒப்பந்தங்கள் கையெழுத்து.

* இரு நாடுகளுக்கும் இடையே விமானம் மற்றும் கடல் வழி போக்குவரத்தை மேம்படுத்துவதற்கான உடன்பாடு.

* ஹோமியோபதி மற்றும் பாரம்பரிய மருத்துவ முறை ஒத்துழைப்பிற்கான உடன்பாடு.

* மொரீஷியஸ் நாட்டில், சைபர் சிட்டி அமைக்க இந்தியா உதவி.

* கலாசார ஒத்துழைப்பு

* இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு ஒப்பந்தம்.

* இந்தி மொழி மேம்பாட்டிற்கான, உலக இந்தி மொழி தலைமைச் செயலக கட்டடத்திற்கு மோடி அடிக்கல் நாட்டினார்.

 போர்ட் லூயிஸ்: இந்தியப் பெருங்கடல் பாதுகாப்புக்காக, மொரீஷியஸ் நாட்டிற்கு, இந்தியா அதிநவீன கப்பலை வழங்கியுள்ளது. அதை, பிரதமர் மோடி நேற்று வழங்கினார். மேலும், இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் தொடர்பாக, இந்திய பிரதமர் மோடியும், மொரீஷியஸ் பிரதமர் அனிரூத் ஜெகந்நாத்தும் விரிவாக பேச்சு நடத்தினர்.இந்தியப் பெருங்கடலில், செஷெல்ஸ், மொரீஷியஸ், இலங்கை ஆகிய மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, செஷெல்ஸ் சுற்றுப் பயணத்தை நிறைவு செய்து, நேற்று முன்தினம் மொரீஷியஸ் சென்றடைந்தார். அங்கு அவரை, அந்நாட்டின் பிரதமர் அனிரூத் ஜெகந்நாத் வரவேற்றார். நேற்று முன்தினம் இரவில், இரு நாடுகளின் தலைவர்களும் சந்தித்து பேசினர். அப்போது, இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக நிலுவையில் உள்ள, இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்தை திருத்த வேண்டும் என்பது குறித்து பேசப்பட்டது. அதன் பிறகு நேற்று, முழுவதும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கடல் ரோந்து மற்றும் தாக்குதல் கப்பல், 'பர்ராகுடா' மொரீஷியஸ் நாட்டிடம் வழங்கப்பட்டது. 1,300 டன் எடை கொண்ட அந்த கப்பலில், ஏராளமான அதிநவீன வசதிகளும், போர் கருவிகளும் உள்ளன. இந்த கப்பலை, அந்நாட்டிடம் வழங்கி பிரதமர் மோடி பேசும் போது, ''பர்ராகுடா மிகவும் அழகானவள். இந்த கப்பலில் ஏராளமான வசதிகள் உள்ளன. மொரீஷியஸ் கடல் எல்லைக்குள், இந்தியப் பெருங்கடலை பாதுகாக்கும் பணியை இவள் (கப்பல்) திறம்பட செய்வாள்,'' என்றார். இதன் மூலம், இந்தியப் பெருங்கடலில், சீன ஆதிக்கத்தை மத்திய அரசு முளையிலேயே கிள்ளி எறிந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் பேசிய அந்நாட்டு பிரதமர் அனிரூத் ஜெகர்நாத் ''விரைவாக தாக்குதல் நடத்தும் விமானங்கள், இலகுரக ஆயுதங்கள் தாங்கிய வீரர்கள் போன்ற பல ராணுவ உதவிகளை இந்தியாவிடம் எதிர்பார்க்கிறோம்; வழங்கும் என நம்புகிறோம்,'' என்றார் maalaimalar.com  தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக