வெள்ளி, 13 மார்ச், 2015

மின்சார உற்பத்தியில் தமிழக அரசுக்கு ஸ்டாலின் சவால்! நிருபித்தால் அரசியலை விட்டே ஒதுங்குவேன்!

மெட்ரோ ரயில் பணி திட்டத்தை துரிதப்படுத்தி, விரைவில் திறக்காவிடில், சென்னையில் நான்கு மாவட்ட தி.மு.க., இளைஞர்களை திரட்டி, பெரும் போராட்டம் நடத்தப்படும்' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பேசினார். சென்னை, தி.நகரில் நடந்த, தி.மு.க., பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: தேர்தல் வெற்றி, தோல்விகள் குறித்து, தி.மு.க., கவலைப்பட்டதில்லை. ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில், 55,445 ஓட்டுகள் பெற்றுள்ளோம். கடந்த தேர்தலை விட, 600 ஓட்டுகள் கூடுதலாகத் தான் பெற்றுள்ளோம். அதனால், தி.மு.க., தோல்வி அடைந்ததாக எடுத்துக் கொள்ளத் தேவைஇல்லை. மெட்ரோ ரயில் திட்டம், 2006ல் தி.மு.க., ஆட்சியில், அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டு, 14,600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டது. ஆனால் ஓரவஞ்சனையால், இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டு, பணி துரிதமாக நடைபெறவில்லை. மெட்ரோ ரயில் பணி திட்டத்தை துரிதப்படுத்தி, விரைவில் திறக்காவிடில், சென்னையில் நான்கு மாவட்ட தி.மு.க., இளைஞர்களை திரட்டி, பெரும் போராட்டம் நடத்தப்படும். அது சிறை நிரப்பும் போராட்டமாக அமையும்.  திராணி பற்றி பேசும் ஜெயலலிதா இந்த சவாலை ஏற்க வேண்டும்......தமிழக மின்சாரவாரிய நிலையை மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும்...அமைதி காத்தால்.....ஒப்பு கொண்டதாக பொருள்
தமிழக சட்டசபையில், அ.தி.மு.க.,வினர், எதிர்க்கட்சிகளை கேவலப்படுத்தி, கொச்சைப்படுத்தி பேசி வருகின்றனர். தமிழக பட்ஜெட் கூட்டத் தொடருக்கான தேதி, இதுவரை அறிவிக்கப்படவில்லை.
b> தொழில் துறையில் முதலிடத்தில் இருந்த தமிழகம், தற்போது, 18வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. புதிதாக, 4,600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்ற அறிவிப்பு, இதுவரை நிறைவேற்றப்படவில்லை. அதில், ஒரு மெகாவாட் மின்சாரம் கூட உற்பத்தி செய்யப்படவில்லை. உற்பத்தி செய்யப்பட்டது என நிரூபித்தால், நான் அரசியலை விட்டு ஒதுங்குவேன். இவ்வாறு, அவர் பேசினார். தினமலர்.com

- நமது நிருபர் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக