வெள்ளி, 13 மார்ச், 2015

டிராபிக் ராமசாமியை சுற்றி வளைத்து அதிகாலையில் கைது; உடனே சிறையில் அடைப்பு! தமிழக போலீஸ் சட்டத்தை பாதுகாக்கிறாய்ங்கடோய்

இது அ தி மு க போலீஸ் கூட்டணியின் பழி வாங்கும் செயலாகப் படுகிறது.
அடேங்கப்பா, எப்பேர்பட்ட திருடனை, மடக்கி, கஷ்டப்பட்டு பிடித்திருக்கின்றனர். எப்பேர்பட்ட தீவிரவாதி இவர் ?? இது முற்றிலும் பழிவாங்கும் செயல். நினைவிருக்கிறதா ?? கருணாநிதி கூட இப்படிதான், நடுநிசியில் கைது செய்யப்பட்டு, சிறையில் அவசர அவசரமாக அடைக்கப்பட்டார். அதுசரி. விடிகாலையில் சிறையில் ராமசாமியை அடைக்கவேண்டிய அளவுக்கு, இது பயங்கரவாதமா அல்லது இவர் தீவிரவாதியா ??? சும்மா காமெடி பண்ணாதீங்கப்பா. அப்படியே இருந்தாலும், இது பெட்டி கேஸ். இதற்கு போய், நள்ளிரவு கைது, விடிகாலையில் சிறை அடைப்பு எல்லாம், ரொம்ப ஓவர். அதுசரி. காவல் துறை அதிகாரிகளுக்கு கூடவா, இது பிரயோஜனமில்லாத அவசரம் என்று தெரியவில்லை ?? இவர் தன் உடலையே தூக்க முடியாத அளவுக்கு வயதானவர் / தளர்ந்தவர் என்று தெரியவில்லையா ?? நாட்டில் எத்தனையோ ஊழல் பெருச்சாளிகள் / திருடர்கள் / தீவிரவாதிகளிடம் காட்ட வேண்டிய வேகத்தை, இப்படி அப்பாவியிடம் காட்டுவது தான் கடமையா ?? இதில் என்ன பெருமை இருக்கிறது ?? ஒரு அப்பாவி வயோதிகரை துன்புறுத்திய பாவம் தேவையா ?? போயும் போயும் செத்த பாம்பின் மேலா கோபத்தை காண்பிப்பது ?? சம்பந்தப்பட்டவர் மேலும் மேலும் பாவ மூட்டையை சுமப்பது உறுதி. அரசன் அன்றே கொல்வான், தெய்வம் நின்று கொல்லும். அதுசரி, புகார் கொடுத்தவரின் மற்றும் அவரது குடும்பத்தினர், இதை பற்றி என்ன நினைக்கின்றனர் ??? அவர்கள் மனசாட்சி இதை ஒத்துகொள்கிறதா ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக