சனி, 14 மார்ச், 2015

அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு உடல்நலக்குறைவு: பெங்களூர் டாக்டர்கள் தகவல்

ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் உள்ள ஜிண்டால் நேச்சர் கியூர் மருத்துவமனையில் இயற்கை முறை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், கெஜ்ரிவாலின் உடல்நிலை இவ்வளவு மோசமாவதற்கு தவறான மற்றும் மன அழுத்தமான வாழ்க்கை முறையும்தான் மூலக்காரணம் என அவருக்கு சிகிச்சை அளித்துவரும் டாக்டர் பபினா நந்தகுமார் குறிப்பிட்டுள்ளார். ஒழுங்காக வேளைக்கு சாப்பிடாமல் குளிர்பானங்கள் போன்றவற்றை அதிக அளவில் பயன்படுத்தியதால் அவரது உடலில் சர்க்கரையின் அளவு அதிகரித்து விட்டது.
மேலும், காற்றின் மாசினால் சுவாசக் கோளாறு ஏற்பட்டு தொடர் இருமல் மற்றும் சுவாசப் பிரச்சனைக்கும் உள்ளாகியிருக்கும் அவருக்கு யோகா வழி சிகிச்சை, உடலில் உள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றும் சிகிச்சை ஆகியவை அளிக்கப்படுவதாகவும் இந்த சிகிச்சை நல்ல பலன் அளித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆரம்பத்தில் இங்கு அவர் சேர்க்கப்பட்ட போது கொடுத்த மருந்து, மாத்திரைகளில் 30 சதவீதம் மட்டுமே இப்போது அவருக்கு அளிக்கப்படுகிறது என்றும் டாக்டர் பபினா நந்தகுமார் கூறினார். maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக