சனி, 14 மார்ச், 2015

பிரதமர் மோடிக்கு யாழ்ப்பாணத்தில் அமோக வரவேற்பு

இந்திய கலாசார நிலையத்திற்கு  அடிக்கல் நாட்டிய பின்  யாழ்ப்பான பொதுநூல் நிலைய மண்டபத்தில் தற்போது நிகழ்சிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது .இன்று தனது யாழ் விஜயத்தினை மேற்கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்பதற்காக யாழ் விழாக்கோலம் பூண்டுள்ளது. நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு யாழ் கே.கே.ஸ் வீதிகள் தோரணங்கள் நிறைகுடங்கள் மற்றும் இலங்கை, இந்திய கொடிகளினால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. சற்று முன்னர் யாழ்.மத்திய கல்லூரி மைதானத்தில் வந்து இறங்கிய இந்திய பிரதமர் யாழ் பொதுநூலகத்தில் நடை பெற்ற விழாக்களில் கலந்து கொண்டார் -
மேலும் மோடியின் வருகை தமது நியாயமான அபிலாசைகளை நிறைவேற்றும் எனவும், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான நிரந்தர தீர்வினை இலங்கை அரசிடம் மோடி முன்வைப்பார் எனும் ஆர்பரிப்பிலேயே இந்தியப் பிரதமரை கோலாகலமாக வரவேற்கிறோம் என யாழ்.மக்கள் கருத்து தெரிவித்தனர்.  - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=237683917914502623#sthash.7Q3tf8kr.dpuf
இதேவேளை கீரிமலை சென்று தனது வழிபாடுகளை மேற்கொள்ள உள்ள மோடி இளவாலையில் இந்திய நிதியுதவியின் கீழ் அமைக்கப்பட்ட இந்திய வீட்டுத்திட்ட வீடுகளை வைபவரீதியாக திறந்து வைத்து பயனாளிகளிடம் கையளிக்கவுள்ளார்.  - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=237683917914502623#sthash.7Q3tf8kr.dpuf
onlineuthayan.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக