செவ்வாய், 24 பிப்ரவரி, 2015

ட்ராபிக் ராமசாமி : அதிமுகவினர் தாக்கவருபோது போலீசார் வேடிக்கை பார்த்தனர்

போலீசார் முன்பே என்னை அதிமுகவினர் தாக்க வந்தனர்: நடவடிக்கை எடுக்கவில்லை: டிராபிக் ராமசாமி புகார் சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பு சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி திங்கள்கிழமை ஆஜராகி, வேளச்சேரி பகுதியில் சட்ட விரோதமாக ஆளும் கட்சியினர் பேனர்கள் வைத்திருந்தனர். இதையடுத்து அங்கு நான் நேரில் சென்று பார்த்து போலீசுக்கு தகவல் கொடுத்தேன். ஆனால், போலீசார் சட்டவிரோத பேனர்களை அகற்ற நடவடிக்கை எடுக்காமல், பேனர்களை வைத்த அரசியல் கட்சியினருக்கு தகவல் தெரிவித்து அவர்களை வரவழைத்தனர். அப்போது, போலீசார் கண் முன்பாகவே ஆளும் கட்சியினர் என்னை தாக்க வந்தனர். என் வாகனத்தை அடித்து சேதப்படுத்தினர். ஆனால் அவர்கள் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறினார். இதையடுத்து நீதிபதிகள், வேளச்சேரியில் நடந்த சம்பவம் குறித்து விரிவான அறிக்கையை செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசு பிளீடருக்கு உத்தரவிட்டனர் nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக