செவ்வாய், 24 பிப்ரவரி, 2015

ஜெ. மீண்டும் முதல்வராக வேண்டுதல்: சிலுவையில் அறைந்து ஹுசைனி பிரார்த்தனை

ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டுதல்' என அறிவித்து, பிரபல கராத்தே மற்றும் வில் வித்தை வீரர் ஹுசைனி தன்னைத்தானே சிலுவையில் அறைந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டார். 
சென்னையில் தன்னைத்தானே சிலுவையில் அறைந்துகொள்ளும் பிரார்த்தனையில் ஈடுபட்ட அவர், உடனடியாக முதலுதவிக்குப் பிறகு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டார். அவர் தற்போது நலமுடன் இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
தன் கைகளில் ஆணிகள் அடித்த பிறகு, "ஜெயலலிதா முதல்வரானால் மட்டுமே ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு பதக்கங்கள் குவிக்க முடியும்" என்று உரக்கச் சொன்னார். இந்த மாதிரி காட்டு மிராண்டிதனமான ஒரு கட்சி தமிழ்நாட்டுக்கு தேவையா ? மனிதர்களின் புத்தியை மழுங்கடித்து அவர்களை உளவியல் ரீதியாக ஒரு அடிமைகளாக்கும் இந்த அதிமுக நிச்சயம் தடை செய்ய படவேண்டிய அமைப்புதான்

முன்னதாக இதுபற்றி ஹுசைனி கூறியதாவது:
"அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக வர வேண்டி எனக்கு நானே சிலுவையில் அறைந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபடுகிறேன்.
முதலில் கால்களில் ஆணியை அடித்துக் கொண்டு, பின்னர் ஒரு கையில் ஆணியை அடிக்க திட்டமிட்டுள்ளேன். அப்படி இல்லை என்றால் ஒரு கையில் மட்டும் நான் அடித்துக் கொள்வேன். மற்றொரு கை மற்றும் கால்களில் என்னுடைய மாணவர்கள் ஆணியை அடிப்பார்கள். சிலுவையில் 6 நிமிடங்கள் 7 வினாடிகள் இருப்பேன். சிலுவையில் இருந்துக் கொண்டே இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக சிறப்பு சொற்பொழிவையும் நடத்த இருக்கிறேன்.
உலகிலேயே அதிக வலியை கொடுக்கக்கூடியது சிலுவையில் அறைவதுதான். அதுவும் தனக்குத்தானே சிலுவையில் அறைந்து கொள்ளும் போது இன்னும் அதிகமான வலி ஏற்படும். அந்த வலியுடன் ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக வரவேண்டும் என்று பிரார்த்தனை செய்தால் கண்டிப்பாக நிறைவேறும். என்னுடைய மாணவர்கள் உலகின் பல்வேறு நாடுகளுக்கு சென்று தங்கப்பதக்கங்களை வாங்க வேண்டும் என்றால், ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வந்தால்தான் முடியும்.
உலகிலேயே முதல் முறையாக தனக்குத்தானே சிலுவையில் அறைந்து கொள்ள இருக்கிறேன். இதற்கு முன்பு 4 நாகப்பாம்புகளை கையில் விட்டு கடிக்க வைப்பது, நெருப்பில் இருந்து வெளியே வருவது என பல்வேறு சாதனைகளை செய்துள்ளேன். அதனால் தனக்குத்தானே சிலுவையில் அறைந்து கொள்வது பெரிய விஷயம் இல்லை. இதற்கு காவல் துறை அனுமதி தேவையில்லை. அதனால் நான் காவல்துறையிடம் அனுமதி வாங்கவில்லை" இவ்வாறு அவர் கூறியிருந்தார்.tamil.thehindu.com/

1 கருத்து: