செவ்வாய், 24 பிப்ரவரி, 2015

அரசியலில் இருந்து விலக ராகுல் காந்தி முடிவா?- மூத்த தலைவர்கள் மீது அதிருப்தியால்.....

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியுள்ள நிலை யில், அதில் பங்கேற்காமல் கட்சிப் பொறுப்பிலிருந்து விடுமுறை எடுத்துக் கொண்டு ராகுல் காந்தி வெளிநாடு பறந்து விட்டார்.
முக்கியமான நாடாளுமன்றத் தொடரை அவர் புறக்கணித்துள்ளதால், அரசியலிலிருந்து விலக அவர் முடிவெடுத்துள்ளாரா எனக் கேள்வியெழுந்துள்ளது.
கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியடைந்தது. அதற்குப் பிறகு நடைபெற்ற தேர்தல்களை கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் வழிகாட்டுதலின்படியே காங்கிரஸ் சந்தித்தது. ஆனால், எல்லாவற்றிலும் அக்கட்சிக்குப் படுதோல்வியே கிடைத்தது.
இதனால், தேர்தலில் ராகுல் பிரச்சாரம் செய்தால், பாஜக வுக்கு வெற்றி நிச்சயம் என கிண்ட லடிக்கும் அளவுக்கு ராகுலின் தலைமை மீது விமர்சனம் எழுந்தது.
கடந்த மாதம் நடைபெற்ற டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறாமல் காங்கிரஸ் வரலாறு காணாத தோல்வியைச் சந்தித்தது.
இதனிடையே காங்கிரஸில் ஒரு தரப்பினர் பிரியங்கா காந்தியை நேரடி அரசியலுக்கு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
வரும் ஏப்ரல் மாதம் அகில இந்திய காங்கிரஸ் மாநாடு நடைபெறவுள்ளது. அதில், ராகுல் காந்தியை காங்கிரஸ் தலைவராக அறிவிக்க முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் ராகுல் காந்தி, கட்சிப் பொறுப்பிலிருந்து சில வாரங்கள் விடுமுறை வேண்டும் என தனது தாயாரும் கட்சித் தலைவருமான சோனியா காந்தியிடம் விண்ணப்பித்தார். அவரும் அந்தக் கோரிக்கையை ஏற்று, ராகுலுக்கு விடுமுறை அளித்துள்ளார்.
கட்சியின் சமீபத்திய தோல்விகளுக்கு எதிர்வினை யாற்றுவது மற்றும் கட்சியின் எதிர்காலம் குறி்த்து சிந்திப்பதற்கு இந்த விடுமுறை காலத்தை ராகுல் பயன்படுத்திக் கொள்வார் என கட்சித் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. ஏப்ரல் மாநாட்டில் கட்சியின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கக் கூடிய முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். எனவே, கட்சி மாநாட்டுக்காக அவர் தயாராக விரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது தாயும், காங்கிரஸ் தலைவருமான சோனியா காந்தியைச் சுற்றி நடக்கும் அரசியல் களால் ராகுல் வருத்த மடைந்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், மூத்த தலைவர்களின் செயல்பாடுகளால் அதிருப்தியடைந்துள்ள ராகுல் காந்தி, பல பொதுச் செயலா ளர்கள் மற்றும் கட்சியின் மாநிலத் தலைவர்களை நீக்கிவிட்டு கட்சிக்கு இள ரத்தம் பாய்ச்ச விரும்புகிறார் எனக் கூறப்படுகிறது.
அரசியலிலிருந்து விலகலா?
ராகுலுக்கு சிந்திக்க அவகாசம் தேவைப்படுகிறது என காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் கடந்த செவ்வாய்க்கிழமையே ஜெர்மனியின் முனிச் நகருக்குச் சென்று, அங்கிருந்து கிரீஸ் சென்றுவிட்டதாகத் தெரிகிறது.
இருப்பினும், அரசியலிலிருந்து விலகும் எண்ணம் அவருக்கு இல்லை; மூன்று அல்லது நான்கு வாரங்கள் விடுமுறைதான் எடுத்திருக்கிறார் என காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
சோனியா மறுப்பு
ராகுல் காந்தியின் இந்த விடுமுறை குறித்து விரிவாக கருத்து தெரிவிக்க சோனியா காந்தி மறுத்துவிட்டார். “எதையெல்லாம் சொல்ல வேண்டுமோ அதை நாங்கள் சொல்லிவிட்டோம். கூடுதலாக எதையும் சொல்லப் போவதில்லை” என தொலைக் காட்சி ஒன்றுக்கு அவர் பதிலளித்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் விமர்சனம்
பட்ஜெட் தொடரைப் புறக் கணித்து, அரசியல் விடுமுறை எடுத்துள்ள ராகுலின் செயல் பாட்டை பாஜக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் மட்டுமின்றி, காங்கிரஸின் கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸும் விமர்சித்துள்ளது.
மத்திய அமைச்சர் பிரதாப் ரூடி கூறும்போது, “தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல் பட்ஜெட் தொடர் தொடங்கியுள்ளது. ராகுலோ விடுமுறையில் சென்றுள்ளார். அவரின் அரசியல் ஈடுபாடு குறித்தும், நாட்டு விவகாரங்களில் அவரின் அக்கறை குறித்தும் கேள்வியெழுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
பாஜக எம்.பி. அனுராக் தாகுர் கூறும்போது, “கடந்த 10 ஆண்டு களாக இரு மக்களவைத் தொடர்களிலும் காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்கவில்லை. எனவேதான், தற்போது மக்கள வையில் 44 எம்.பி.க்கள் என்ற அளவில் காங்கிரஸ் சுருங்கிப் போய்விட்டது” என்றார்.
தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் பிரபுல் படேல் கூறும் போது, "குறிப்பாக கட்சித் தலைவர்கள் நாடாளுமன்றக் கூட்டத் தொடரை வெகு சிரத்தையாக எடுத்துக் கொள்ள வேண்டும். அங்கு மக்களின் தேவைகளுக்கு குரல் கொடுக்க வேண்டும்" என்றா   tamil.thehindu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக